சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் திணை ரவையை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதே பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் (தலா 2 கப்) சம அளவு எடுத்து அத்துடன் ஏலப்பொடி மற்றும் குங்கும பூ சேர்த்து காய்ச்சி வைத்துக்கொள்ள வேண்டும்.சர்க்கரை பாகு தயார்.
- 2
ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு நெய்,பால், பால் மாவு மற்றும் 2 மேஜைக்கரண்டி சர்க்கரை சேர்த்து காய்ச்சி அத்துடன் திணை ரவை மற்றும் ரவையை சேர்த்து நன்றாக கிளறவும். கெட்டியான பருவம் வந்ததும் அத்துடன் 1 மேஜைக்கரண்டி மைதா மாவை சேர்த்து நன்றாக கிளறவும்.கலவை கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும். இந்த கலவை சிறிது ஆரும் வரை காத்திருக்கவும்
- 3
இந்த கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து உருண்டைகளாக பிடித்து வைத்து கொள்ள வேண்டும்.
- 4
மற்றொரு பாத்திரத்தில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், இந்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.பொரித்த உருண்டைகளை உடனுக்குடன் சர்க்கரை பாகில் போட்டு விட வேண்டும்.திணை குலாப் ஜாமுன் தயார்.
- 5
பரிமாறும் போது திணை குளாப் ஜாமுன் மேல் நறுக்கிய முந்திரி பருப்பு துண்டுகளை தூவி பரிமாறவும், பார்க்க அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ருசியாகவும் இருக்கும்.
- 6
டிப்ஸ் : 1.ரவை சேர்ப்பதன் மூலம் திணை ரவையினால் ஏற்படும் சிறிதளவு கசப்பு தன்மை நீங்கி விடும்.
2.மைதா மாவு கெட்டி தன்மையை அதிகரிக்கும் இதனால் உருண்டை பிடிக்க வசதியாக இருக்கும்.
3. நெய்,பால் மற்றும் பால் மாவு திணை குளாப் ஜாமுனுக்கு கூடுதல் ருஸி கொடுக்கும்.
Similar Recipes
-
பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்
#kayalscookbookஎப்போதும் சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ்களை விட சற்று புதுவிதமாக நான் இந்த கார்ன் கிரொக்கெட்ஸ் ஐ தயாரித்துள்ளேன். இதை நாம் அதிகமான அளவில் தயார் செய்து ஃப்ரீசரில் வைத்து இரண்டு மாதங்கள் வரை வைத்து தேவைப்பட்ட பொழுது தேவையான அளவு பொரித்து சாப்பிடலாம். Asma Parveen -
மில்க் பர்பி (Milk burfi recipe in tamil)
#GA4 #WEEK8 MILK# குறைந்த நேரத்தில் சுலபமாக செய்யக் கூடிய மில்க் பர்பி. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
ஆப்பிள் ஃபிர்டர்ஸ் (Apple fritters recipe in tamil)
#cookpadturns4#cookwithfruits Sara's Cooking Diary -
-
-
-
-
-
-
-
திணை காய்கறி பொங்கல்
#breakfastதிணை , பாசிப் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்த ஆரோக்கியமான பொங்கல். இதை ஒன் பாட் மீலாக சுலபமாக செய்து விடலாம். Sowmya sundar -
-
-
More Recipes
கமெண்ட்