ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

#vattaram #week8
ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
8 நபர்கள்
  1. 1 கிலோ மட்டன்
  2. 1 கிலோ சீரக சம்பா பிரியாணி அரிசி
  3. 1பிரியாணி இலை
  4. 4துண்டு பட்டை
  5. 88 ஏலக்காய்
  6. 10கிராம்பு
  7. 80 கிராம் இஞ்சி
  8. 100 கிராம் பூண்டு
  9. 200 மில்லி ரீபைண்ட் எண்ணெய்
  10. 2 மேஜைக்கரண்டி நெய்
  11. 4பெரிய வெங்காயம்
  12. 4தக்காளி
  13. 1 கைப்பிடி புதினா இலைகள்
  14. 1 கைப்பிடி மல்லி இலைகள்
  15. 100 மில்லி தயிர்
  16. 3 மேஜை கரண்டி வரமிளகாய் விழுது
  17. 1 தேக்கரண்டி கரம் மசாலா
  18. 3பச்சை மிளகாய்
  19. 1எலுமிச்சை
  20. தேவையான அளவுஉப்பு
  21. தேவையான அளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடு செய்யவும் இதில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பிறகு பூண்டு அரைத்து சேர்த்து வதக்கவும். வர மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, தயிர் சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்.

  3. 3

    பிறகு கழுவி வைத்துள்ள கறியை சேர்த்து 2 மேஜைக்கரண்டி உப்பு சேர்த்து பாதியளவு மல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து வதக்கவும். ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் ஒரு மணி நேரம் கறியை வேகவிடவும்.

  4. 4

    கறி வெந்த பின் ஒரு பங்கு அரிசிக்கு ஒன்னே முக்கால் பங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். ஊறிய அரிசியில் உள்ள தண்ணீரை வடித்து பிரியாணி பாத்திரத்தில் சேர்க்கவும். கூடவே கரம் மசாலா மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து சேர்க்கவும். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்து ருசி பார்க்கவும். இதனை ஒரு கிளறு கிளறி விட்டு மூடி போட்டு மிதமான தீயில் 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

  5. 5

    அரிசியும் தண்ணீரும் சம அளவுக்கு வந்த நிலையில் அடுப்பின் மேல் ஒரு இரும்பு தோசைக்கல் வைத்து அதன்மேல் பிரியாணி பாத்திரத்தை வைக்கவும். இதில் மேலே சிறிது நெய் மற்றும் மீதமுள்ள மல்லி மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும். இப்போது சிறு தீயில் 15 நிமிடங்கள் தம்முக்கு விடவும். அவ்வளவுதான் அடுப்பை அணைத்து விட ருசியான ஆம்பூர் தம் பிரியாணி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes