முட்டை மசாலா ரோஸ்ட் சான்விச்(Egg Masala Roast Sandwich)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#vahisfoodcorner
மிகவும் சுவையாகவும் வித்தியாசமான, சுவாரசியமான செய்முறையாகவும் இருந்தது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  1. 5 அவித்து வேகவைத்த முட்டைகள்
  2. தேவையான அளவுவேகவைக்க தண்ணீர் மற்றும் உப்பு
  3. மசாலா செய்வதற்கு:
  4. 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1/4 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா தூள்
  6. 1/2 டேபிள்ஸ்பூன் சோம்புத்தூள்
  7. 2 டேபிள்ஸ்பூன் கான்பிளவர் பவுடர்
  8. தேவையான அளவு உப்பு
  9. 3 டேபிள்ஸ்பூன் பிரெட் கிரம்ஸ் பவுடர்
  10. 1முட்டை
  11. சான்விச் மசாலாவிற்கு:
  12. முதலில் வேக வைத்த முட்டையின் மஞ்சள் கரு
  13. 1 டேபிள்ஸ்பூன் மிளகு தூள்
  14. தேவையான அளவு உப்பு
  15. 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் 5 முட்டைகளை வேக வைத்து சமமான இரண்டு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். மஞ்சள் கருகளை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.

  2. 2

    மஞ்சள் கருவை நன்றாக மசித்து விட்டு, அதனுடன் மிளகுத்தூள், உப்பு மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கிரீம் போல் கலக்கவும். இதனை அப்படியே தனியாக மூடிவைக்கவும்.

  3. 3

    பிறகு ஒரு கப்பில் 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள், 1/4 டேபிள்ஸ்பூன் கரம்மசாலா, 1/2 டேபிள்ஸ்பூன் சோம்புத்தூள், 2 டேபிள்ஸ்பூன் கான்பிளவர் பவுடர், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடவும். பிறகு முட்டை வெள்ளைக்கரு, ஒவ்வொன்றாக இந்த மசாலாவில் நன்றாக நனைத்து, பிரெட் கிரம்ஸில் பிரட்டி வைக்கவும்.

  4. 4

    பிறகு ஒரு கப்பில் 1 முட்டையை உடைத்து ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி, வேகவைத்த மசாலா முட்டைகளை ஒவ்வொன்றாக நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

  5. 5

    எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து, இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.

  6. 6

    முதலில் தயார் செய்து வைத்த மஞ்சள் கரு மசாலாவை, பைப்பிங் பேக்கில் வைத்து, வறுத்த முட்டை ரோஸ்ட்டின் மேல் சான்விச் போல் வைத்து அலங்கரிக்கவும்.

  7. 7

    வித்தியாசமான மிகவும் சுவையான, கண்கவரும் முட்டை மசாலா ரோஸ்ட் சாண்ட்விச் ரெடி 🍽️🍴🥚😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes