எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
மூன்று பேர்
  1. 1 கப்வரகரிசி
  2. கால் கப்பாசிப்பருப்பு
  3. அரை டீ ஸ்பூன்பெருங்காய தூள்
  4. தேவையான அளவுஉப்பு
  5. இரண்டு டேபிள் ஸ்பூன்நெய்
  6. அரை ஸ்பூன்சீரகம்
  7. அரை ஸ்பூன்உடைத்த மிளகு
  8. சிறிதுகறிவேப்பிலை
  9. சிறிதளவுமுந்திரி

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    வரகரிசியுடன் பாசிப்பருப்பு சேர்த்து கழுவி பத்து நிமிடம் ஊற விடவும்.

  2. 2

    அதை நீரை வடித்து ஒருர குக்கரில் சேர்த்து மூன்று கப் தண்ணீர் சேர்த்து அரை சிட்டிகை பெருங்காய தூள் தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.

  3. 3

    நன்கு குழைந்து வெந்ததும் அதை தனியே வைக்கவும்.

  4. 4

    ஒரு பானில் நெய் சேர்த்து சீரகம். ப. மிளகாய். உடைத்த மிளகு கறிவேப்பிலை முந்திரி சேர்த்து பொரிய விட்டு பொங்கலில் ஊற்றி கலந்து விடவும்.

  5. 5

    சுவையான ஆரோக்யமான வரகரிசி பொங்கல் தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970
அன்று

Similar Recipes