குலோப் ஜாமூன்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த குலோப் ஜாமூன் செய்யலாம் வாங்க
பல பேருக்கு இது நல்லா வரும் சில பேருக்கு இது உடைந்து விடும் அதனால் செய்ய தயங்குவார்கள் அவர்களுக்காக சின்ன சின்ன டிப்ஸ் உடன் இதை பகிர்கிறேன்
குலோப் ஜாமூன்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த குலோப் ஜாமூன் செய்யலாம் வாங்க
பல பேருக்கு இது நல்லா வரும் சில பேருக்கு இது உடைந்து விடும் அதனால் செய்ய தயங்குவார்கள் அவர்களுக்காக சின்ன சின்ன டிப்ஸ் உடன் இதை பகிர்கிறேன்
சமையல் குறிப்புகள்
- 1
குலோப் ஜாமூன் மிக்ஸ் ஐ ஒரு முறை நன்றாக ஜலித்து கொள்ளவும் பின் அதில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து விரல்களால் நன்கு பிசிறி விடவும் (உள்ளங்கைகளால் அழுத்தி பிசைய கூடாது) சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து விரல்களால் சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
பின் 10 நிமிடங்கள் வரை ஊறவிடவும் ஈரத்துணி கொண்டு மூடி மாவு காயாமல் ஊறவிடவும்பின் கைகளில் சிறிது நெய் தடவி கொண்டு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
- 2
சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் சர்க்கரை கரையும் வரை மெல்லிய தீயில் வைத்து கொதிக்க விடவும் சர்க்கரை கரைந்ததும் தீயை கூட்டி வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும் பிசுக்கு பதத்திற்கு அடுத்த பதம் வந்ததும் (அரை கம்பி பதம்) ஏலத்தூள் சேர்த்து இறக்கி வைக்கவும் சற்று ஆறி இளஞ்சூடாக இருக்கும் போது ரோஸ் எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
பின் அடிகணமான வாணலியில் எண்ணெய் ஊற்றி மெல்லிய தீயில் வைத்து சூடாக்கவும் எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும் உருண்டை போட்டதும் உடனே மேல் எழுந்து வராமல் நிதானமாக வர வேண்டும்
மொத்தமாக போடாமல் ஒரு ஆறு ஏழு உருண்டைகளாக போடவும் உடனே கரண்டி பயன்படுத்த வேண்டாம் போட்ட உருண்டைகள் மேலே எழுந்து வந்ததும் மெதுவாக திருப்பி விடவும்
- 4
திருப்பி விட்டு இரண்டு புறமும் நன்றாக வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்
- 5
இந்த கலர் சரியாக இருக்கும் பின் அடுத்த உருண்டைகளை போடும் போது ஒரு நிமிடம் கழித்து போடவும் எண்ணெய் சூட்டை கவனித்து கொள்ளவும்
- 6
இவ்வாறு அனைத்து உருண்டைகளையும் பொரித்து எடுக்கவும் சற்று ஆறவிடவும் பின் இளஞ் சூட்டில் இருக்கும் சர்க்கரை பாகில் போட்டு நான்கு மணி நேரம் வரை ஊறவிடவும்
பொரித்த உருண்டைகள் மற்றும் சர்க்கரை பாகு இரண்டும் ஒரே சூட்டில் இருக்க வேண்டும் உருண்டை மிகவும் சூடா இருந்தா சர்க்கரை பாகை அதிக அளவில் உருஞ்சு நொத நொதனு இருக்கும் சர்க்கரை பாகு ஆறி இருந்தா உருண்டையானது சர்கரை பாகை உறிஞ்ச இயலாது இரண்டும் இளஞ் சூட்டில் இருக்க வேண்டும்
- 7
ஊறிய பிறகு உருண்டைகள் ஒவ்வொன்றும் நாம் போட்டதை விட சற்று பெரியதாக இருக்கும்
- 8
சுவையான ஆரோக்கியமான குலோப் ஜாமூன் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*குண்டு, குண்டு குலோப் ஜாமூன்*(gulab jamun recipe in tamil)
#Cookpadturns6பிறந்த நாளைக்கு மிகவும் ஆப்ட்டான ரெசிபி இது. குலோப் ஜாமூன் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.செய்வது சுலபம். Jegadhambal N -
மில்க் ஜாமூன்
இது என் மகளுக்காக நானாக செய்தது நம் குக் பேடில் பலர் குலோப் ஜாமூன் செய்துள்ளனர் புதுசாக செய்ய எண்ணி செய்தேன் Jayakumar -
பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்
#lockdown#goldenapron3#bookபிறந்த நாள் என்றாலே குழந்தைகளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடதான் விரும்புவார்கள் இந்த சூழ்நிலையில் பேக்கரிகள் எல்லாம் சுத்தமாக இல்லை பொருட்கள் வாங்கவும் வழி இல்லை அதனால் வீட்டில இருக்கிற பொருட்களை கொண்டு முடிந்த அளவிற்கு செய்த கேக் Sudharani // OS KITCHEN -
குலோப்ஜாமூன்
#lockdown#bookகுழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது சரியாக சாப்பிட நேரம் இல்லாமல் அவசர அவசரமாக சாப்பிட்டு போறாங்க விடுமுறையிலாவது நன்றாக செய்து கொடுங்க என்று கூறுவார்கள் தினமும் விதவிதமாக செய்ய முடியலை என்றாலும் வாரத்தில ஒரு நாளைக்காது செய்து கொடுத்தேன் Sudharani // OS KITCHEN -
குலோப் ஜாமூன் (gulab jamun recipe in tamil)
குலோப் ஜாமூன் அனைவரும் விரும்பி உண்ணும் இனிப்பு வகை முக்கியமாக குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர்.இதில் சிறிய சிறிய குறிப்புகளை கொண்டு நாம் செய்தால் குலாப் ஜாமூன் விரிசல் விடாமல் நன்றாக வரும்❤️✨☺️ #ATW2 #TheChefStory RASHMA SALMAN -
-
🌰🌰🌰இனிப்பு குழிப்பணியாரம் 🌰🌰🌰
#vattaramகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த சிற்றுண்டி இனிப்பு பணியாரம். Ilakyarun @homecookie -
காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)
காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி #hotel Sundari Mani -
டோரா கேக் (Dora cake recipe in tamil)
#kids1# குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த டோரா கேக். #kids1# Ilakyarun @homecookie -
குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
GRB, குலோப் ஜாமூன் மிக்ஸூடன், சிறிது கோதுமை மாவு, சேர்த்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
குலோப் ஜாமூன் (Gulab jamun recipe in Tamil)
# flour1குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான டெஸர்ட் ரெசிபி குலோப் ஜாமூன். நான் இன்ஸ்டன்ட் மாவில் இதை செய்யவில்லை வித்யாசமாக கோவா செய்து அதன் மூலம் இந்த குலோப்ஜாமுன் செய்து பார்த்தேன்.எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட் இந்த குலோப் ஜாமூன்.🥣🥣 Azhagammai Ramanathan -
குலோப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil)
#Kids2 குழந்தை களுக்கு மிகவும் பிடிக்கும் #kids2 A.Padmavathi -
-
ஆலூ ஜாமூன் (Aloo jamun recipe in tamil)
#Arusuvai3இந்த செய்முறையை நான் Adaikkammai Annamalai அவர்களின் செய்முறை இதை முதல் முறையாக முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றாக வந்துள்ளது Sudharani // OS KITCHEN -
தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)
#Newyeartamil#clubகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
ரோஸ் மில்க் சிரப் குல்ஃபி(நோ ஸுகர்)
பிங்க் கலர் அனைவருக்கும் மிகவும் பிடித்த கலர்.எனவே ரோஸ் மில்க்கில் குல்ஃபி செய்யலாம் என்று எண்ணி இதனை செய்தேன்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது பிடிக்கும்.1/2லி பாலில் 5குல்ஃபி வந்தது.செய்வது மிகமிக சுலபம். Jegadhambal N -
கோதுமை ஜாமூன் (Kothumai jamun recipe in tamil)
#deepfry கடையில் ஜாமூன் மிக்ஸ் வாங்காமல் எளிதாக ஆரோக்கியமாக வீட்டில் ஜாமூன் செய்யலாம் Prabha muthu -
குலோப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)
#CDYஎன் பையனுக்கு,விருந்துகளில் குலோப்ஜாமுன் சாப்பிட்ட அனுபவம். ஆனால், பெயர் தெரியாத காரணத்தினால் செய்து கேட்டதில்லை. ரொம்ப ஸ்வீட் மற்றும், கலோரி அதிகமாதலால் செய்து கொடுப்பதும் இல்லை.இப்பொழுது,தொலைக்காட்சியில் அடிக்கடி வரும் 'ஆச்சி குலோப் ஜாமுன் மிக்ஸ்' பார்த்து,பெயர் தெரிந்து கொண்டு செய்து கொடுக்க சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கின்றான்.அவ்வளவு பிரியம். Ananthi @ Crazy Cookie -
குண்டு குண்டு குலோப் ஜாமுன் (Gundu Gundu Gulab Jamun Recipe in Tamil)
#master class எவ்வளவுதான் பெரிய உணவு நிபுணராக இருந்தாலும் குலோப் ஜாமுன் செய்யும் பொழுது ஒவ்வொரு இடத்திலும் பல நுணுக்கமான டிப்ஸ்களை கடைப்பிடித்தால் தான் நமக்கு உடையாத குண்டு குண்டு குலோப்ஜாமுன் கிடைக்கும் உடையாத. குளோப் ஜாமுன் எப்படி செய்வது என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். Santhi Chowthri -
-
குலோப் ஜாமுன் பார்ட்டி ஸ்பெஷல்(gulab jamun recipe in tamil)
#cf9கிறிஸ்மஸ் பார்டி ஸ்பெஷல் அது மட்டும் அல்லாமல் இது என்னுடைய நூறாவது ரெசிப்பி ஆகும் ஆகையால் ஸ்வீட் ரெசிபி செய்து இங்கு என்னுடைய வாழ்த்துக்களை அனைத்து தோழிகளுக்கும் தெரிவிக்கிறேன் என்னை ஊக்குவித்த cookpadஅட்மின் மற்றும் என்னுடைய ரெசிபியை பார்த்து சமைத்து ருசித்து லைக் கமெண்ட் கொடுத்து கொடுத்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். Sasipriya ragounadin -
* மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)
#TheChefStory #AtW2குலோப் ஜாமூன் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.அதையே சற்று வித்தியாசமாக செய்ய நினைத்து இந்த குலோப் ஜாமூனை செய்தேன்.மிகவும் வித்தியாசமானது. Jegadhambal N -
-
-
-
பீட்ரூட் தேங்காய்ப்பால் ஜாமூன் (Beetroot thenkaaipaal jamun recipe in tamil)
#coconutபீட்ரூட் மற்றும் தேங்காய் பால் வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான ஜாமூன் ரெசிபியை பார்க்கலாம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கும்Aachis anjaraipetti
-
ருசியான செட்டிநாடு மாவுருண்டை (Chettinadu maavu urundai recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை ருசித்து உண்ணுவார்கள்#arusuvai1#goldenapron3 Sharanya -
-
காலா ஜாமூன்(kala jamoon recipe in tamil)
வழக்கமாக செய்யும் குலோப் ஜாமுன் பவுடரில் இதை செய்தேன். மிக சிவப்பாக இல்லாமல் மேலும் வேகவிட்டு கருப்பாக மொறுமொறுப்பாக சுட்டெடுத்து கெட்டியான ஜிராவில் போட்டு எடுத்தேன். உடையாமல் அழகாக ஊறி இருந்தது. சுவையும் மாறுபட்டதாக இருந்தது Meena Ramesh -
டேஸ்டி டொமேட்டோ கெட்சப் (Tasty Tomato Ketchup)
#colours1குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததாக இருப்பது டொமேட்டோ கெட்சப் அதனை வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம் Sowmya
More Recipes
கமெண்ட் (2)