சமையல் குறிப்புகள்
- 1
1/2 ஸ்பூன் மிளகு, 1/2 ஸ்பூன் ஸ்பூன் சீரகம், 5 பூண்டுப்பல்களை ஒரு இடி கல்லில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு அடுப்பில் ஒரு குக்கரில் வைத்து இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளிக்கவும் பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு வதக்கவும்.
- 3
பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும். பிறகு இடித்து வைத்திருக்கும் மிளகு சீரகம் பூண்டு விழுதை அதில் போட்டு வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு போட்டு வதக்கு வதக்கவும்.
- 4
பிறகு ஊற வைத்திருக்கும் அரிசி பருப்பை தண்ணீர் வடியவிட்டு அதில் போட்டு மஞ்சள்தூள் போட்டு ஒரு நிமிடம் கிளறவும்.
- 5
பிறகு அதற்கு தேவையான அளவு 3 டம்ளர் தண்ணீர் அதில் ஊற்றவும்.
- 6
பிறகு ஒரு கொத்து கொத்தமல்லித்தழை தூவி ஒரு கொதி வந்தவுடன் குக்கரை மூடி 4 விசில் விட்டு 5 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை நிறுத்தவும் பிறகு பரிமாறவும்.
- 7
சுவையான ஈரோடு ஸ்டைல் அரிசி பருப்பு சாதம் தயார்.
Similar Recipes
More Recipes






















கமெண்ட்