கேரட் ஹேஷ் பிரவுன்(Carrot Hash brown)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#colours1
ஹேஷ் பிரவுன் என்றாலே உருளைக்கிழங்கு பயன்படுத்தி செய்யும் ஒரு சிற்றுண்டி.

நான் கேரட் ,முட்டை சேர்த்து செய்துள்ளேன்.முட்டை விரும்பாதவர்களுக்காக கேரட்டுடன் உருளைக்கிழங்கு சேர்த்து செய்துள்ளேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
1நபர்
  1. 1பெரிய கேரட் துருவியது
  2. 1முட்டை
  3. 2ஸ்பூன் மல்லித் தழை
  4. 1/4ஸ்பூன் மிளகுத்தூள்
  5. 1/4ஸ்பூன் மிளகாய்த்தூள்,
  6. உருளைக்கிழங்கு சேர்த்தால் 1/2ஸ்பூன்அரிசி மாவு
  7. 1ஸ்பூன் மைதா மாவு பயன்படுத்த வேண்டும்
  8. தக்காளி சாஸ், சீஸ் விருப்பப்பட்டால் சேர்க்க
  9. தேவையானஅளவுஉப்பு
  10. 1/2உருளைக்கிழங்கு
  11. தேவையானஅளவுஎண்ணெய் அல்லது வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    துருவிய கேரட்டுடன் முட்டை, மிளகு தூள், மிளகாய் தூள்,உப்பு, மல்லித்தழை சேர்த்து கலந்து கொள்ளவும்.

  2. 2

    தோசை தவாவில் எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து இந்த கலவையை சேர்க்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

  3. 3

    ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும்.

    முட்டை வாசத்தை தவிர்க்க,நான் தக்காளி சாஸ் மற்றும் சீஸ் துருவி சேர்த்துக்கொண்டேன்.

    அவ்வளவுதான் சுவையான கேரட் ஹேஷ் பிரவுன் ரெடி.

  4. 4

    இதில் முட்டை பிடிக்காதவர்கள், வேகவைக்காத உருளைக்கிழங்கைத் துருவி முட்டைக்கு பதிலாக சேர்க்க வேண்டும்.

    (உருளைக்கிழங்கை துருவி,குளிர்ந்த தண்ணீரில் 20 நிமிடங்கள் வைத்து பின் நன்றாக பிழிந்து சேர்க்கவும்).

  5. 5

    மாவு பதம் கிடைக்க 1/2 ஸ்பூன் அரிசி மாவு,1 ஸ்பூன் மைதா மாவு சேர்க்கவும்.பின்,மிளகு தூள்,மிளகாய் தூள்,உப்பு,மல்லித்தழை சேர்த்து கலந்து கொள்ளவும்.

  6. 6

    பின்னர் இந்த கலவையை விருப்பமான வடிவத்திற்கு தட்டி, தவாவில் தேவைக்கேற்ப எண்ணெய் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.

  7. 7

    இதே இதே செய்முறையை வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்தும் செய்யலாம். இரண்டுமே சுவையாக இருக்கும்.

  8. 8

    எண்ணெய் அதிகமாக சேர்த்தால் நன்றாக கிரிஸ்பியாக வரும். நான் இங்கு குறைவாகவே சேர்த்துள்ளேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes