கேரட் கேசரி

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#carrot
நான் ஃபுட் கலர் எதுவும் உபயோகிக்காமல் கேரட் பயன்படுத்தி இந்த கேசரியை செய்து உள்ளேன்.

கேரட் கேசரி

#carrot
நான் ஃபுட் கலர் எதுவும் உபயோகிக்காமல் கேரட் பயன்படுத்தி இந்த கேசரியை செய்து உள்ளேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 minutes
4 பரிமாறுவது
  1. கேரட் 2
  2. தண்ணீர் 4 டம்ளர்
  3. நெய் தேவையான அளவு
  4. பாதாம், முந்திரி தேவையான அளவு
  5. ரவை 1 டம்ளர்
  6. ஏலக்காய் தூள் சிறிதளவு
  7. சர்க்கரை 1 டம்ளர்

சமையல் குறிப்புகள்

30 minutes
  1. 1

    முதலில் கேரட்டை தோள் சீவி நன்றாக கழுவி சுத்தம் செய்து கிரேட்டர் வைத்து துருவி எடுத்துக் கொள்ளவும். பிறகு அதை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்து எடுத்து அதனை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.

  2. 2

    வானலில் நெய் ஊற்றி பாதாம், முந்திரி சிறிதாக நறுக்கி சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.பிறகு அதே நெய்யில் ரவை சேர்த்து லேசாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

  3. 3

    அதே வானலில் கேரட் வடிகட்டிய தண்ணீருடன் சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும். நான் செய்ததில் கேரட் தண்ணீர் 1 1/2 டம்ளர் மற்றும் தண்ணீர் 2 1/2 டம்ளர் சேர்த்து கலந்து கொதிக்க விட்டேன். சிறிதளவு நெய் விட்டு கொள்ளவும்.

  4. 4

    தண்ணீர் லேசாக கொதி வந்ததும் ரவையை ஒரு கையில் கொட்டி இன்னொரு கையால் கிளறவும். கட்டி இல்லாமல் நன்றாக கலந்து விடவும்.ரவை வெந்து வரும் போது சர்க்கரை சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

  5. 5

    ரவை கட்டி இல்லாமல் நன்கு கலந்து வரும் போது வறுத்து வைத்த முந்திரி பருப்பு சேர்த்து நன்கு கிளறி தேவைப்பட்டால் நெய் விட்டு கிளறி விட்டு இறக்கவும். புட் கலர் இல்லாமல் கேரட் கேசரி தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes