ஆப்பம்-தேங்காய் பால்

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

ஆப்பம்-தேங்காய் பால்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பேர்
  1. 3கப் பச்சரிசி(ரேஷன் பச்சரிசியும் பயன்படுத்தலாம்)
  2. 1/2கப் முழு உளுந்து
  3. 1/4ஸ்பூன் வெந்தயம்
  4. 1.5கப் தேங்காய்
  5. 1கப் பழைய சாதம்
  6. தேவையானஅளவுஉப்பு
  7. 1/2முறிதேங்காய்- பால் எடுக்க
  8. தேவயான அளவு வெள்ளை (நாட்டு)சர்க்கரை

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சரிசி,உளுந்து, வெந்தயம் மூன்றையும் சேர்த்து 5மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    பின்,மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும். அரைத்ததில் 1கப் மாவு எடுத்து அதனுடன் 1கப் தண்ணீர் கலந்து, வாணலியில் சேர்த்து சிறு தீயில் வைத்து சூடுபடுத்தவும். கை விடாமல் கிளற வேண்டும்.

  3. 3

    பேஸ்ட் பதத்திற்கு வந்து விடும்.அதனை ஆற வைத்து,அதனுடன் தேங்காய் மற்றும் பழைய சாதம் சேர்த்து அரைக்கவும்.

  4. 4

    இந்த கலவையை அரைத்த மாவுடன் கலந்து, தேவையான உப்பு சேர்த்து, குறைந்தது 8மணி நேரம் புளிக்க வைக்கவும்.

  5. 5

    பின் ஆப்ப கடாயில் 2 கரண்டி மாவு ஊற்றி விரித்து விட்டு,மூடி போட்டு வேக வைக்கவும்.

    தேங்காய் சேர்த்து இருப்பதால் மாவு மிகவும் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.

    அவ்வளவுதான்.சுவையான ஆப்பம் ரெடி

  6. 6

    துருவிய தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து,சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

    அரைத்த விழுதை வடிகட்டிக்கு மாற்றி,தேவையான அளவு சுடு தண்ணீர் சேர்த்து பால் எடுக்கவும்.இப்பொழுதே சர்கரை சேர்த்தால்,இளஞ்சூட்டில் கரைந்து விடும்.

  7. 7

    இதே போல் இன்னொரு முறை தேங்காயை அரைத்து, தேவையான அளவு சுடு தண்ணீர் சேர்த்து வடிகட்டிக்கு மாற்றி,இரண்டாம் பால் எடுக்கவும்.

    சுவையான தேங்காய் பால் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes