எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5-6 நபர்கள்
  1. 1.5 கிலோ சிக்கன்
  2. 2 டேபிள் ஸ்பூன் தயிர்
  3. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  4. 2.5 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள்
  5. 1.5 டீஸ்பூன் தனி மிளகாய் தூள்
  6. 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  7. 2 டீஸ்பூன் சோம்பு தூள்
  8. 2 டீஸ்பூன் சீரகத்தூள்
  9. 1/2 எலுமிச்சை பழ சாறு
  10. 2முதல் 3 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு
  11. 2 முட்டை
  12. தேவையான அளவுஉப்பு
  13. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு பவுலில் ஒன்றரை கிலோ சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிக்கனின் மேல் சிறிது கீறிவிட்டு அதன் பிறகு தயிர்,மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் தனி மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    அதன்பிறகு கரம் மசாலா, சோம்புத் தூள், சீரகத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    பிறகு கான்பிளவர் மாவு, முட்டை, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    அதன் பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து சிக்கன் முழுவதும் மசாலா நன்கு தடவும் படி பிரட்டி விட வேண்டும். கலந்த சிக்கனை இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

  5. 5

    சிக்கன் ஊறும் நேரத்தில் கிரில் அடுப்பு தயார் செய்து கொள்ள வேண்டும். வலதுபுறம் இரண்டு செங்களும் இடதுபுறம் இரண்டு செங்களும் நடுவில் ஒரு செங்களும் வைத்து அடுப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதன் மேல் ஒரு கிரில்வளையை வைத்து அதன் மேல் அடுப்புக் கரியை பரப்பி கொள்ள வேண்டும். அதன்பிறகு செலங்களை படத்தில் காண்பித்து அடக்கிக்கொள்ள வேண்டும்.

  6. 6

    மேலே ஒரு வலை வைத்து அதன் மேல் மறுபடியும் செங்கலை வைத்து படத்தில் காண்பித்தார் அடக்கிக் கொள்ள வேண்டும். அடுப்புக் கரியை பற்றவைத்து மேலே உள்ள வளையில் சிறிது வெண்ணை தடவி அதன் மேல் கலந்து வைத்துள்ள சிக்கனை வைத்துக்கொள்ள வேண்டும். ஒருபுறம் சிக்கன் நன்கு வெந்த பிறகு மேலே சிறிதளவு வெண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.

  7. 7

    அதன்பிறகு மறுபுறம் சிக்கனை திருப்பி விட்டு இருபுறமும் சிக்கன் நன்கு வெந்த பிறகு ஒரு பிளேட்டில் மாற்றி மெயனீஸுடன் பரிமாறினால் சுவையான பார்பிகியூ கிரில் சிக்கன் வீட்டிலேயே தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sara's Cooking Diary
அன்று
Madurai

Similar Recipes