எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
1 நபர்
  1. 4மேஜைக்கரண்டி கருப்பு எள் அல்லது வெள்ளை எள்
  2. 4மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு
  3. 1மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு
  4. 4 வரமிளகாய்
  5. தாளிக்க:
  6. கடுகு
  7. உளுந்து
  8. கடலைப்பருப்பு
  9. வேர்கடலை
  10. கறிவேப்பில
  11. தேவையானஅளவு நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் எள்ளை தண்ணீரில் நன்றாக கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    வெறும் வாணலியில் கழுவிய எள்ளை சேர்த்து வறுக்கவும். அதன் ஈரம் காய்ந்து,பின் எள் வறுபட ஆரம்பிக்கும். வறுபட்டதும் வெடிக்கும். அப்பொழுது எள்ளை தனி பாத்திரத்துக்கு மாற்றவும்.

  3. 3

    இதேபோல், கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு நன்றாக சிவக்க வறுத்து தனியாக வைக்கவும்.

  4. 4

    பின்,வெந்தயம், கறிவேப்பிலை மற்றும் வர மிளகாயை வறுக்கவும்.

  5. 5

    வறுத்த அனைத்தையும் ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.
    அரைத்த பொடியை, பாட்டிலில் அடைத்து தேவைப்படும் போது பயன் படுத்தலாம்.

  6. 6

    வாணலியில், தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, கருவேப்பிலை,உளுந்து, கடலைப்பருப்பு, வேர்க்கடலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

  7. 7

    பின்னர் அரைத்து வைத்துள்ள பொடி 2ஸ்பூன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து வடித்த சாதத்தை கொட்டி கிளறவும்.

    அரைத்து வைத்துள்ள பொடி ஏற்கனவே வறுத்தது என்பதால், பொடி தேவை எனில் இன்னும் சாதத்தின் மேல் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

  8. 8

    அவ்வளவுதான் சுவையான எள்ளு சாதம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes