பச்சரிசி தேங்காய் சாதம் (Pacharisi satham recipe in tamil)

#pooja
இந்தத் தேங்காய் சாதத்தில் முந்திரிப்பருப்பு அல்லது வறுத்த வேர்க்கடலை சேர்த்து தாளித்து கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
பச்சரிசி தேங்காய் சாதம் (Pacharisi satham recipe in tamil)
#pooja
இந்தத் தேங்காய் சாதத்தில் முந்திரிப்பருப்பு அல்லது வறுத்த வேர்க்கடலை சேர்த்து தாளித்து கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை ஊற வைத்து சாதத்தை உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும். எண்ணெய் சேர்த்து ஆறவிடவும். அரை மூடி தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பெரிய வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி அல்லது வேர்க்கடலை, பொடியாக அரிந்த பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இவை சிவந்ததும் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறவும். தேங்காய் துருவல் சிவக்காமல் நன்கு வாசம் வந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும். இதில் தேவையான அளவு தூள் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை சேர்த்துக் கொள்ளவும்.
- 3
இப்போது ஆறிய சாதத்தை இந்த தேங்காய்க் கலவையில் சேர்த்து நன்கு கலந்து விடவும். சுவையான தேங்காய் சாதம் தயார். சுவாமிக்கு படைக்க மட்டுமல்ல லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்லவும் இந்த கலவை சாதங்கள் நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பச்சரிசி எலுமிச்சை சாதம் 🍋 (Pacharisi elumichai satham recipe in tamil)
#poojaசுவாமி நைவேத்தியத்திற்கு எப்படி வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்ப்பது இல்லையோ அதேபோல் புழுங்கல் அரிசி சாதமும் சேர்க்க மாட்டோம். விரத நாட்களில் பச்சரிசி சாதம் மட்டுமே செய்வோம். மற்றும் வெறும் நாட்களில் புழுங்கல் அரிசியில் இதுபோன்ற கலவை சாதம் செய்வோம்.புழுங்கல் அரிசியை விட பச்சரிசியில் புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், செய்யும் போது சுவை அதிகமாக இருக்கும். தயிர் சாதத்திற்கு பச்சரிசியை ஊற வைத்து பாலில் வேக வைத்து கொஞ்சமாக தயிர் சேர்த்து இஞ்சி கருவேப்பிலை கொத்தமல்லி பச்சை மிளகாய் பெருங்காயத்தூள் தாளித்து சாதம் கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
பச்சரிசி அடை (Pacharisi adai recipe in tamil)
#india2020இது என் அம்மா வீட்டு பலகாரம். பாட்டி காலத்தில் இருந்தே செய்வார்கள்.என் பாட்டி வீட்டிற்க்கு சென்றால் பாட்டி எங்களுக்கு செய்து கொடுப்பார்கள்.என் மகனுக்கு என் அம்மா செய்து குடுபார்கள்.(இன்று நானும் 4 வயது குழந்தைக்கு பாட்டி ஆகி விட்டேன்) என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவன் வெளிநாட்டில் இருப்பதால் நான் இதை செய்வதே இல்லை.இன்று குக் பாட் போட்டிக்காக செய்தேன். இது தேங்காய் சுவையுடன் மிளகு வாசனையுடன் இருக்கும். தேங்காய் சட்னி அல்லது தயிர் தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும். விரத நாட்களில் பச்சரிசி பலகாரம் செய்ய ஏற்ற டிஃபன்.இதற்கு என்று பிரத்யோகமாக பித்தளை அடை கல் உள்ளது.அம்மா கொடுத்தது. Meena Ramesh -
தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)
#Poojaஇது பாலில் அரிசியை வேக வைத்து செய்த தயிர் சாதம்.எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வழக்காமாக சமையல் செய்யும் ஐயர் சொல்லி குடுத்த முறை.இப்படி செய்தால் சீக்கிரம் தயிர் சாதம் புளிக்காது என்று அவர் சொன்னார்.கோவில்களுக்கு எடுத்து செல்லும் போது,அல்லது டூர் செல்லும் போது இப்படி செய்து எடுத்து செல்லலாம் , நன்றாக இருக்கும்.சீக்கிரம் புளிக்காது. Meena Ramesh -
பச்சரிசி புதினா சாதம் (Pacharisi puthina satham recipe in tamil)
#pooja (வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய சாதம் Vaishu Aadhira -
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
#poojaஅவல் உப்புமா வெங்காயம் சேர்க்காமல் தேங்காய் மட்டும் சேர்த்து செய்த உப்புமா.எலுமிச்சை பழ சாறு சேர்த்தும் செய்யலாம் அல்லது புளியில் ஊற வைத்தும் செய்யலாம். Meena Ramesh -
தேங்காய் சாதம்/ Coconut Rice (Thenkaai satham recipe in tamil)
#coconut நம் பழக்கத்தில் தேங்காய் மிக முக்கியமான ஒரு உணவாகும்.தேங்காய் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புபை குறைக்க உதவுகிறது.லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
-
பச்சரிசி புளி சாதம் (Pacharisi pulisatham recipe in tamil)
# Pooja( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)மிகவும் சுவையாக மற்றும் மணமாக இருக்கும் புளி சாதம் Vaishu Aadhira -
பச்சரிசி நெல்லி சாதம் (Pacharisi nelli satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)சர்க்கரை நோயாளிகள் மற்றும் அனைவருக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன நெல்லி சாதம் Vaishu Aadhira -
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#Varietyriceபெரும்பாலான குழந்தைகள் குழம்பு சாதத்தை விட கலவை சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள் அதில் நாம் சத்தான பருப்புகள் தேங்காய் மற்றும் சேர்த்து கொடுக்கும்பொழுது பிள்ளைகளுக்கு செலுத்தி அண்ணா ஒரு உணவாகும் குறிப்பாக இது சாதம் மட்டும் வடித்து விட்டால் போதும் ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் Sangaraeswari Sangaran -
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir satham recipe in tamil)
#millet குதிரைவாலி தயிர்சாதம் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதேபோன்றே சாமை,வரகு அரிசி களில் செய்யலாம். Siva Sankari -
-
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்(Vellai Kondaikadalai sundal recipe in Tamil)
#pooja* பொதுவாக கொண்டைக்கடலை சுண்டல் என்றாலே தாளித்து தேங்காய் பூ தூவி இறக்குவார்கள் ஆனால் இது புதுவிதமான சுவையுடன் என் மாமியார் சொல்லிக்கொடுத்த வித்தியாசமான கொண்டைக்கடலை சுண்டல்.இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். kavi murali -
அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
#india 2020இது தலைமுறை தலைமுறையாக செய்துவரும் உணவு ஆகும். இன்றைய இளம் வயதினருக்கு இது பற்றி செய்ய தெரியாது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு சேர்ப்பதால் மிளகு வாசத்துடன் இருக்கும். இந்த உப்புமாவை வெங்கலப் பானையில் கிளறினால் சுவை அபரிதமான சுவையாக இருக்கும். என்னிடமும் அம்மா தந்தது இருக்கிறது. ஆனால் உபயோகப்படுத்துவது இல்லை பராமரிப்பு காரணமாக. இதுபோன்ற உணவுகளை தான் அந்த காலத்தில் விருந்தினர் வந்தால் ஸ்பெஷலாக செய்வார்கள். Meena Ramesh -
நாகர்கோவில் ஸ்பெஷல் தவணை பொடி (Thavanai podi recipe in tamil)
#home நாகர்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தவணை பொடி சாதம் தயிர் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும் சத்யாகுமார் -
-
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
2 கிண்ணம் சாத்தை வடித்து கொள்ள வேண்டும். தேங்காய் 1/2 மூடி திருகி தேங்காய் பூ எடுத்து, வாசம் வரும் வரை வறுக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடலைபருப்பு 1 ஸ்பூன், நிலக்கடலை 1 கைப்பிடி, 3 பச்சை மிளகாய், 2 வரமிளகாய், கடுகு, உளுந்து, தூளாக்கிய மிளகு 1 ஸ்பூன், சீரகம், கருவேப்பிலை போட்டு வறுத்து; வறுத்தவற்றை சாதத்துடன் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். ஒSubbulakshmi -
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut தேங்காய் சட்னி சாதம் சப்பாத்தி இட்லி தோசை போன்ற அனைத்து உணவுகளுக்கும் சரியான சைட் டிஷ் ஆக இருக்கும் Siva Sankari -
பச்சரிசி தயிர் சாதம்
#combo4வெயிலுக்கு ஏற்ற அட்டகாசமான தயிர் சாதத்தை எளிமையாக செய்யும் முறையும் பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
தண்டு பரமேனியம் (Thandu parameniyam recipe in tamil)
#arusuvai3புளி சேர்க்காத வாழைதண்டு குழம்பு. மிகவும் சுவையாக இருக்கும். கொஞ்சம் காரம் சேர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்,இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். நீர்க்க வைக்க கூடாது. கொஞ்சம் கெட்டியாக வைக்க வேண்டும். Meena Ramesh -
தேங்காய் சேவை (Cocount sevai) (Thenkaai sevai recipe in tamil)
அரிசியை வைத்து செய்யும் இந்த சேவை மிகவும் மிருதுவாக இருக்கும். இதில் தேங்காய், வேர்க்கடலை சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
-
பச்சரிசி சீரக சாதம் (Pacharisi seeraga satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் , பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய மற்றும் உடலுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் உணவு சீரக சாதம். குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் ஏற்றது Vaishu Aadhira -
-
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#varietyதேங்காயில் அதிக அளவு தாது உப்புகள் நிறைந்து காணப்படுவதால் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.உடம்புக்குத் தேவையான நீர்ச்சத்து தாது உப்புக்களை தரக்கூடிய தேங்காயில் இன்று சுவையான தேங்காய் சாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
முருங்கக்காய்,கத்தரிக்காய் மசாலா கூட்டு (Murunkaikaai, kathirikkaai masala kootu recipe in tamil)
#coconutஎனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல காரத்துடன் செய்து சுட சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் வாய்க்கு மிகவும் ருசியாக இருக்கும்.😋😛 Meena Ramesh -
-
🌷🌻🌷🌻🌷அம்மனுக்கு உகந்த அரிசி பருப்பு சாதம்🌷🌻🌷🌻🌷 (Arisi paruppu satham recipe in tamil)
அம்மனுக்கு உகந்த அரிசி பருப்பு சாதம் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. இது மிகவும் சுவையாக இருக்கும். இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#pooja Rajarajeswari Kaarthi
More Recipes
கமெண்ட்