கும்பகோணம் கடப்பா

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

கும்பகோணம் கடப்பா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடம்
4பேர்
  1. 4உருளைக்கிழங்கு
  2. 2வெங்காயம்
  3. 5பச்சைமிளகாய்
  4. 1டேபிள்ஸ்பூன் சோம்பு
  5. 2 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை
  6. அரைக்கப் தேங்காய்
  7. அரை கப் பயத்தம்பருப்பு
  8. 1துண்டு இஞ்சி
  9. 5பூண்டு பற்கள்
  10. தேவையானஉப்பு
  11. 2டேபிள் ஸ்பூன்தேங்காய் எண்ணைய்
  12. சிறிதுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

40நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு பாசிப்பருப்பு இவைகளை நன்கு வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு இவைகளை நைஸாக அரைக்கவும்

  3. 3

    ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

  4. 4

    இப்பொழுது வேகவைத்த உருளைக்கிழங்கு, பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடவும்.

  5. 5

    பச்சை வாசனை போய் நன்கு கொதித்து வரும்பொழுது இறக்கிவிடவும்.

  6. 6

    அருமையான கும்பகோணம் கடப்பா தயார். இது இட்லி தோசை பூரி சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes