சமையல் குறிப்புகள்
- 1
200 கிராம் பச்சரிசி மற்றும் 200 கிராம் உளுந்தை தண்ணீரில் நன்றாக அலசி விட்டு 3 மணி நேரம் ஊற விட வேண்டும்
- 2
3 மணி நேரம் ஊறிய பிறகு தண்ணீர் முழுவதையும் வடித்துவிட்டு அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் (மாவு கெட்டியாக இருக்க வேண்டும்..அதிகம் தண்ணீர் சேர்க்க கூடாது..)
- 3
அடுத்து தேங்காய் பால் செய்வதற்கு ஒரு முழு தேங்காயை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி தண்ணீர் சேர்த்து அரைத்து பால் எடுக்க வேண்டும் (வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து தேங்காயை அரைத்தால் பால் நன்றாக கிடைக்கும்)
- 4
தேங்காயை அரைத்தவுடன் ஒரு வடிகட்டி வைத்து அதில் நாம் பாலை வடிகட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்
- 5
அடுத்து தேங்காய் பாலில் அரை டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் மற்றும் 200 கிராம் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்....தேங்காய் பால் தயார்..
- 6
அடுத்து பணியாரம் சுடுவதற்கு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானவுடன் நாம் அரைத்து வைத்துள்ள மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் விட வேண்டும் பணியாரம் நன்றாக எண்ணெயில் மூழ்கி வேகும் அளவிற்கு எண்ணெய் ஊற்ற வேண்டும்
- 7
பணியாரம் நன்றாக வெந்ததும் அதனை ஒரு வடிதட்டில் எடுத்து வைக்க வேண்டும்
- 8
அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும்... தண்ணீரில் நாம் சுட்டு எடுத்து வைத்துள்ள பணியாரத்தை ஒரு முறை அலசி விட்டு எடுத்தால் பணியாரத்தில் உள்ள எண்ணெய் நீங்கி அது தேங்காய்ப்பாலுடன் சாப்பிடும்போது இன்னும் சுவையாக இருக்கும்
- 9
ஒரு முறை தண்ணீரில் அலசி எடுத்த பிறகு பணியாரத்தின் மேல் நாம் அரைத்து வைத்துள்ள சுவையான தேங்காய்ப்பால் சேர்த்து ஊற விட வேண்டும் குறைந்தது ஒரு அரை மணி நேரமாவது ஊற விட வேண்டும் அப்பொழுதுதான் பணியாரம் சாப்பிடுவதற்கு சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும்
- 10
இதோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய மிகவும் ருசியான பால் பணியாரம் தயார் வாங்க சுவைக்கலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ஐந்தரிசி பணியாரம்(multi rice paniyaram recipe in tamil)
#wt3செட்டிநாட்டு பலகாரங்களில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு எங்க வீட்டுல அடிக்கடி செய்வோம் சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
தேங்காய், பால் பர்ப்பி
#colours3 - white....இரண்டு மூணு விதமாக தேங்காய் பர்ப்பி செய்வார்கள்... நான் தேங்காய் பூவுடன் பால் சேர்த்து சுவையான சாப்பிடான பார் ஃபி செய்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#india2020 பால் பணியாரம் செட்டிநாடு பலகாரங்களில் மிகவும் பிரசித்து பெற்ற ஒன்று செட்டிநாட்டு விசேஷங்களில் பால் பணியாரத்திற்கு எப்போதும் முக்கிய இடமுண்டு Viji Prem -
பால் பணியாரம்(paal paniyaram recipe in tamil)
#m2021இந்த வருடத்தில் நிறைய இனிப்பான தருணங்கள் அமைந்தது அதேபோல் வருட முடிவிலும்இனிப்புடன் மகிழ்வோம். Kanaga Hema😊 -
-
நவராத்திரி பிரசாதம் பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
பச்சரிசி 100கிராம் ,உளுந்து 100கிராம் நன்றாக ஊறப்போட்டு ஒரு ஸ்பூன் உப்பு போட்டுநைசாக அரைக்கவும். மாவுஉருண்டை களை சிறியதாகப் போட்டுபொரித்து தேங்காய் ப்பால் ,சீனி , ஏலக்காய்கலந்து அதில் ஊறப்போட்டு சாப்பிடவும் ஒSubbulakshmi -
பால் பணியாரம் # cook with milk
செட்டிநாட்டு கல்யாணங்களில் காலை உணவாக இதை கண்டிப்பாக பரிமாறுவர். Azhagammai Ramanathan -
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#coconutசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான பால் பணியாரம் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
-
-
பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பால் பாயசம்(noodles payasam recipe in tamil)
"அதிதி தேவோ பவ" விருந்தோம்பல் விருந்தினர்கள் தெய்வம் முகம் மலர வரவேற்று அவர்கள் விரும்புவதை சமைப்பேன். குழந்தைகளுக்கு இனிப்பு பிடிக்கும். MEGNA, MY NIECE is an adorable intelligent little. always curious. " aunti, this noodle looks like glass" she said. "wait, you are going to make payasam with me using this noodle" I told her. நாங்கள் இருவரும் சேர்ந்துசுவையான, சத்தான பாயசம் செய்தோம். #qk Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
சுக்கு பால்
#lockdown#bookஇந்த lockdown ல வீட்ல இருக்குற பொருளால் எவ்வளவு சிக்கனமா சமைக்கலாம் என்பதை உணர்ந்தேன்.பழைய காலத்து ஆரோக்கியமான சமையல் செய்ய நேரம் கிடைக்கிறது.காலத்தின் அருமையை உணர முடிந்தது. Sarojini Bai -
-
சேமியா பால் பாயசம்
#colours3 - white #vattaram11 -திடீர் கஸ்ட் வரும்போது வீட்டிலிருக்கும் பொருள்கள் வைத்து சீக்கிரத்தில் செய்ய கூடிய மிக சுவை மிக்க சேமியா பாயசம்... Nalini Shankar -
தேங்காய் பால்
#combo3 தேங்காய்ப்பால் இடியாப்பம் புட்டு போன்ற உணவுகளுக்கு ஏற்ற சைட்டிஷ். தேங்காய் பாலில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் தினந்தோறும் கொடுக்கலாம். Siva Sankari -
More Recipes
கமெண்ட்