மீன் குழம்பு

Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
5 பேர்
  1. 1/2 கிசுரும்பு மீன்
  2. ஒரு கை அளவுபுளி
  3. 3 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  4. 3 ஸ்பூன்மல்லி தூள்
  5. 1/2 டீஸ்பூன்மஞ்சள்தூள்
  6. அரை மூடிதேங்காய்
  7. 1 ஸ்பூன்சோம்பு
  8. 8 சிறியவெங்காயம்
  9. 2தக்காளி
  10. சிறிதுகறி வடகம்
  11. 2பச்சை மிளகாய்
  12. சிறிதுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    மீனை சுத்தம் செய்து வைக்கவும்.பிறகு புளியை ஊற வைத்து கொள்ளவும்

  2. 2

    பிறகு தேங்காய் சோம்பு சிறிய வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து வடிகட்டி கொண்டு மிளகாய்த்தூள் மல்லி தூள் மஞ்சள் தூள் சேர்த்து பின்பு 2 தக்காளியை அத்துடன் கரைத்து பின்பு அரைத்த தேங்காயை சேர்த்து வைத்து கொள்ளவும்.

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கறி வடகம் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும். பிறகு கரைத்து வைத்த குழம்புவை சேர்த்து கொதிக்க விடவும்

  5. 5

    கொதித்த பிறகு மாங்காய் மீன் ஆகியவற்றை சேர்த்து மீன் வெந்தவுடன் இறக்கி பரிமாறவும்.சுவையான மீன் குழம்பு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979
அன்று

Similar Recipes