🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸

வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு இதுபோல புதுவிதமாக செய்து கொடுத்தாள் விரும்பி சாப்பிடுவார்கள்.
🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸
வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு இதுபோல புதுவிதமாக செய்து கொடுத்தாள் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கப் மைதா எடுத்து கொண்டு அதோடு அரை கப் ரவை சேர்த்து ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்க்கவும்.
- 2
தண்ணி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின் சிறு சிறு உருண்டையாக உருட்டி வைக்கவும்.
- 3
ஐந்து அச்சு வெல்லத்தை எடுத்து அதை தூளாக்கிக் கொள்ளவும். இன்னொரு கடாயை வைக்கவும்.
- 4
பின் வெல்லத்தை அதில் போட்டு கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைய விடவும்.
- 5
பின் பலாப்பழத்தை எடுத்து விதையை நீக்கி சிறு துண்டுகளாக எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மசிய அரைத்து விழுதாக்கவும்.
- 6
பின் அரை மூடி தேங்காய் துருவல் எடுத்துக் கொண்டு அதையும் மிக்சி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.
- 7
அரைத்த தேங்காய் விழுதை வெல்லப்பாகுடன் ஊற்றவும். பின் 5 ஸ்பூன் ரவையை எடுத்து அடுப்பில் கடாயை வைத்து லேசாக வறுக்கவும்.
- 8
அந்தப் பாகுடன் ரவையை கொட்டி கிளறிவிடவும் பின் 5 ஏலக்காய் எடுத்து பொடியாக்கவும்.
- 9
கிளறி வைத்த புராணத்துடன் சேர்த்து ஏலக்காய் பொடியை தூவவும் கடைசியாக 4 ஸ்பூன் நெய்யை ஊற்றிக் கிளறி அடுப்பை அணைத்து இறக்கவும்.
- 10
உருண்டை பிடித்து ஊறிய மாவை எடுத்து ஒரு பட்டர் ஷீட்டில் எண்ணெய் தடவி மாவை வைத்து அதற்கு மேல் பலாப்பழ பூரணத்தை வைக்கவும்.
- 11
கையால் பூரணத்தை மூடி வெளி வராமல் எண்ணை தொட்டு கையால் அழுத்தவும். பின் அந்த போலியை அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து.... எண்ணெயைத் தடவவும்.
- 12
பின் முன் புறம் பின் புறமாக பிரட்டி எடுத்து ஒரு தட்டில் பரிமாறவும் ருசியான பலாப்பழ இனிப்பு போளி ரெடி...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பருப்பு போளி(paruppu poli recipe in tamil)
என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டிகளில் ஒன்று இந்த பருப்பு போளி.இதை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#WDY kavi murali -
🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil
#millkஇந்த ரவா பால்கோவாவை செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.Deepa nadimuthu
-
-
-
கேழ்வரகு பிடி கொழுக்கட்டை (Kelvaragu pidi kolukattai recipe in tamil)
கேழ்வரகு சிறுதானிய வகையை சேர்ந்தது. அதிக ஊட்டச்சத்து கொண்டது. இது உடம்பிற்கு மிகவும் நல்லது. இப்படி கொழுக்கட்டை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #steam Aishwarya MuthuKumar -
-
பருப்பு போளி
#அம்மாஎங்க அம்மாவுக்கு பருப்பு போளி ரொம்ப பிடிக்கும். அன்னையர் தின விழா சார்பாக எங்க அம்மாவுக்காக இந்த போளி. நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
சொக்கரப்பாண் (Sokkarappan recipe in tamil)
#pooja மிகவும் ருசியான பலகாரம். மாலை நேரத்தில் இந்த பலகாரம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பர். ஆயுத பூஜை க்கு நெய்வேத்தியம் செய்வோம். செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரம். Aishwarya MuthuKumar -
-
பூரண போளி என்ற பருப்பு போளி
#vattaram Chennaiபோளி என்றாலே வெஸ்ட் மாம்பலம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டால் தான் நினைவுக்கு வரும். பருப்பு போளி மற்றும் தேங்காய் போளி இங்கு பிரபலம். Nalini Shanmugam -
தேங்காய் இனிப்பு போளி (Thenkaai inippu poli recipe in tamil)
#arusuvai1#nutrient3#goldenapron3#week19 Sahana D -
ட்ரை ஃப்ரூட்ஸ் போளி (Dry fruits poli recipe in tamil)
#cookpadTurns4#cookwithdryfruits Santhi Murukan -
நெய் முருங்கைக்கீரை தேங்காய் லட்டு (nei murungai thengai laddu recipe in tamil)
முருங்கைக்கீரை இல் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#book #myfirstrecipe #book #goldenapron3 Afra bena -
உன்னியப்பம் (Unniappam recipe in tamil)
#keralaமாவை ரெடி செய்து புளிக்க வைக்க 8 மணி நேரம் ஆகும் காலையில் எழுந்ததும் ஊறவைத்து அரைத்து புளிக்க விட்டா மாலை நேரத்தில் ஸ்நேக்ஸாக சூடான டீ உடன் 20 நிமிடத்தில் ரெடி செய்து சூடாக பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
பலாப்பழ கீர் (Palaapazha kheer Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 #bookபலாப் பழத்தில் வைட்டமின் எ,வைட்டமின் சி அதிகமாக உள்ளது.வேற பழங்களை விடவும் வைட்டமின் பி ஆனது இதில் அதிகமாக உள்ளது.பலாப் பழதை இப்படி கீர் செய்து கொடுத்தால் எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள். Sarojini Bai -
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
-
பருப்பு போளி (dhall poli)
#everyday4 தேங்காய் ,வெல்லம் ,பருப்பு அனைத்தும் கலந்து செய்த போலி மைதா எதுவும் சேர்க்கவில்லை கோதுமையை வைத்து அழகாக செய்யலாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் அனைவருக்கும் ஏற்றது. Deiva Jegan -
-
-
கடலைப்பருப்பு லட்டு (Kadalai paruppu laddo recipe in tamil)
#jan1#week1 கடலைப்பைருப்பு லட்டு மிகவும் சுவையாக இருக்கும். உடம்பிற்கு நல்லது. குழந்தைகள் விரும்பி உண்பர்.புது வருடத்தின் முதல் வாரம் இனிப்புடன் துடங்குவோம் 😊. Aishwarya MuthuKumar -
-
-
மினி சாக்லேட் ரவா கேக் பணியாரம் (Mini chocolate rava cake Recipe in Tamil)
#virudhaisamayal குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Thulasi -
சர்க்கரை உப்பேரி அல்லது வறட்டி (jaggery coated plantain chips)
#bananaஇதை சர்க்கரை உப்பேரி அல்லது சர்க்கரை வரட்டி என்றும் கூறுவர். இது கேரளாவில் பாரம்பரியமாக செய்யக் கூடிய உணவு. ஓனம் பண்டிகை அன்று அவர்கள் பாரம்பரியமாக செய்து வருகிறார்கள். நான் பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது என் டீச்சர் கேரளாவில் இருந்து வந்தார். ஒரு நாள் அவர் ஊரிலிருந்து அம்மா செய்த சர்க்கரை வரட்டி எங்களுக்குக் கொடுத்தார். அப்பொழுதுதான் நான் முதல் முறையாக அதை சாப்பிட்டேன். நான் அப்பொழுதிலிருந்து இதற்கு மிகப் பெரிய ஃபேன் ஆகிவிட்டேன். இதை ஏர் டைட் பாக்ஸில் வைத்தால் கெடாமல் இருக்கும். Nisa -
கோதுமை ரவா கிச்சடி (Kothumai ravai kichadi recipe in tamil)
#onepot கிச்சடி மற்றும் உப்மா வகைகளை விரும்பாதவர்களுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்Durga
-
அரிசி மாவு "களி"(riceflour kali recipe in tamil)
#HJ -பச்சரிசியை வறுத்து ரவை பதத்துக்கு பொடி செய்து செய்வது வழக்கமாக உள்ளது.. நான் பதப்படுத்தின பச்சரிசி மாவை சிவக்க வறுத்து அதை வைத்து களி செய்திருக்கிறேன்...மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நக்ஷத்திரத்தில் இந்த களி செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்வார்கள்... Nalini Shankar -
-
பேரிச்சம்பழ போளி (Peritchampazha poli recipe in tamil)
#flourபேரிச்சம் பழம் வெல்லம் சேர்த்து மைதா மாவில் செய்த போளி Vaishu Aadhira
More Recipes
கமெண்ட் (2)