பலாகொட்டை சீஸி பன்னீர் ரோல்ஸ்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#kayalscookbook.. Starter..பலாகொட்டயுடன் சீஸ், பன்னீர் சேர்த்து செய்த புதுமையான, வித்தியாசமான சுவையில் கோதுமை மாவில் சேர்த்து செய்த பலாகொட்டை சீஸி பன்னீர் ரோல்..

பலாகொட்டை சீஸி பன்னீர் ரோல்ஸ்

#kayalscookbook.. Starter..பலாகொட்டயுடன் சீஸ், பன்னீர் சேர்த்து செய்த புதுமையான, வித்தியாசமான சுவையில் கோதுமை மாவில் சேர்த்து செய்த பலாகொட்டை சீஸி பன்னீர் ரோல்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20-25 நிமிடங்கள
4 பரிமாறுவது
  1. 20ஸ்டாப்பிங் செய்ய ---வேகவைத்து தோல் உரித்த பலாகொட்டை
  2. 1/2 கப் துருவிய பன்னீர்
  3. 1/4 கப் துருவிய சீஸ்
  4. 1பொடியாக நறுக்கின வெங்காயம்
  5. 1/2 - காப்சிகம்
  6. 1ஸ்பூன் பொடியாக நறுக்கின இஞ்சி பூண்டு
  7. 1டேபிள்ஸ்பூன் schezwan சோஸ்
  8. 1ஸ்பூன் சோயா சோஸ்
  9. 1ஸ்பூன் ரெட் சில்லி சோஸ்
  10. 1ஸ்பூன் சில்லி பிளேக்
  11. 1ஸ்பூன் மிளகு தூள்,உப்பு
  12. 2கப் -கோதுமை மாவு
  13. 2-டேபிள்ஸ்பூன் சோள மாவு
  14. 2ஸ்பூன் எண்ணெய்
  15. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

20-25 நிமிடங்கள
  1. 1

    முதலில் பலாகொட்டைய வேகவைத்து தோல் உரித்து நன்கு மசித்து வைத்துக்கவும். ஒரு பவுலில் கோதுமை மாவு, சோள மாவு, எண்ணெய், உப்பு சேர்த்து கலந்து தண்ணி சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து எடுத்து வைத்துக்கவும்

  2. 2

    ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு சேர்த்து வறுத்து வெங்காயம், காபிசிகம் சேர்த்து வதக்கவும்

  3. 3

    அத்துடன் மசித்த பலா கொட்டை,, உப்பு சேர்த்து நன்கு வதக்கி சேஷவான் சோஸ், சில்லி சோஸ், சோயா சோஸ் சேர்த்து வதக்கவும்

  4. 4

    அதில் துருவிய பன்னீர் சேர்த்து கலந்து வதக்கி சில்லி பிளேக், மிளகு தூள், சேர்த்து கலந்து வைத்துக்கவும்.. ஸ்டாப்பிங் தயார்

  5. 5

    பிசைந்து வைத்திருக்கும் மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து பூரி போல் இட்டு நடுவில் ஸ்டாப்பிங்மசாலா மற்றும் துருவின சீஸ் சேர்த்து மாவை மடித்து நீளமாக சுருட்டி, ஓரங்களில் தண்ணி தொட்டு ஒட்டி வைத்து விடவும்.

  6. 6

    ஸ்டவ்வில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பலா கொட்டை சீசி பன்னீர் ரோலை எண்ணையில் போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். வித்தியாசமான சுவையில் செய்த பலா கொட்டை சீஸி பன்னீர் ரோல் சுவைக்க தயார்.. டொமட்டோ சாஸுடன் சுவைக்கவும்..குறிப்பு - நான் கோதுமை மாவில் செய்துள்ளேன், மைதா மாவில் செய்யலாம்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes