வாழைத்தண்டு சட்னி

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பேர்
  1. ஒரு நீள வாழைத்தண்டில் பாதி
  2. 2ஸ்பூன் வெள்ளை எள்
  3. ஒரு துண்டு இஞ்சி
  4. 3மிளகாய்
  5. சிறிதளவுகருவேப்பிலை
  6. சிறிதளவுமல்லிஇலை
  7. 1/4 மூடி தேங்காய்
  8. சிறிதளவுபுளி
  9. தேவையானஅளவு உப்பு
  10. தேவையானஅளவு கடலை எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வாழைத்தண்டு நார் எடுத்து,கலர் மாறாமல் இருக்க மோர் -ல் போட்டு,மீண்டும் நார் இருந்தால் எடுக்கவும்.

  2. 2

    கடாயில், எண்ணெய் ஊற்றி முதலில் இஞ்சித் துண்டுகளை சேர்க்கவும். பின்னர் எள்ளை சேர்க்கவும். எள் வெடித்து சிதறும் போது மிளகாய் சேர்க்கவும்.

  3. 3

    பின்பு கழுவி வைத்துள்ள வாழைத்தண்டை சேர்த்து கிளறவும். உப்பு சேர்க்கவும்.

  4. 4

    வாழைத்தண்டில் உள்ள தண்ணீர் வெளியேறி பத்து நிமிடங்களில் வெந்துவிடும். அடிக்கடி கிளறவும்.

  5. 5

    வெந்ததும்,தேங்காய் துருவல், சிறிது கொத்தமல்லி தழை மற்றும் புளி சேர்த்து கிளறவும். 2 நிமிடம் கிளறினால் போதும்.இதை ஆற வைக்கவும்.

  6. 6

    வாணலியில், எண்ணெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

  7. 7

    ஏற்கனவே ஆற வைத்துள்ள கலவையை மிக்ஸி ஜார்க்கு மாற்றி அதனுடன் தாளித்துள்ள பொருட்களில் பாதியை சேர்த்து கொரகொரப்பாக அல்லது நைசாக அரைக்கவும்.உப்பு சரிபார்க்கவும்.

  8. 8

    அரைக்கும் பொழுது மிளகாய் காரத்தை பார்த்துக்கொண்டு அரைக்கவும்.

    அரைத்த விழுதில் மீதியிருக்கும் தாளித்த பொருட்களை கொட்டவும்.

    அவ்வளவுதான் சுவையான வாழைத்தண்டு சட்னி ரெடி.

  9. 9

    இது இட்லி,தோசைக்கு (டாப்பிங்ஸ்) சிறந்த காம்பினேஷன் ஆக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes