எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5பேர்
  1. 1/2கப் நிலக்கடலை
  2. 1/2 கப் கொத்தவரங்காய்
  3. 1டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  4. 1டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  5. 1/2டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு
  6. 1டேபிள் ஸ்பூன் தனியா
  7. 1/2டீஸ்பூன் மிளகு
  8. 4வற்றல் மிளகாய்
  9. 2டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  10. 1/2கப் புளி கரைசல்
  11. தேவையான அளவுகல் உப்பு
  12. தாளிக்க:
  13. 1டீஸ்பூன் எண்ணெய்
  14. 1/4டீஸ்பூன் கடுகு
  15. 1/4டீஸ்பூன் உளுந்து பருப்பு
  16. மிளகாய் வற்றல்
  17. ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
  18. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

5பேர்
  1. 1

    நிலக்கடலையை கழுவி இரண்டுமணி நேரம் ஊறவைக்கவும்.பின்னர் வேக வைத்து எடுக்கவும்.

  2. 2

    கொத்தவரங்காய் கழுவி,பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    வறுக்க தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.

  4. 4

    வெரும் வாணலியை ஸ்டவ்வில் வைத்து கடலை பருப்பு,உளுந்து பருப்பு, மிளகு,தனியா,வற்றல்,
    பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

  5. 5

    மிக்ஸி ஜாரில் வறுத்த மசாலா பொருட்களை சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

  6. 6

    துவரம் பருப்பை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

  7. 7

    பின்னர் ஒரு கடாயை ஸ்ட வ்வில் வைத்து,வேக வைத்து வைத்துள்ள நிலக்கடலை, கொத்தவரங்காய் சேர்த்து, அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து, புளி கரைசல் சேர்த்து வேக விடவும்.

  8. 8

    அதன் பின் வேகவைத்து வைத்துள்ள பருப்பை சேர்க்கவும்,தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து வேக வைக்கவும்.

  9. 9

    வெந்த குழம்பை எடுத்து பௌலில் சேர்த்து குழம்பில் கடுகு, உளுந்து பருப்பு, கறிவேப்பிலை,வற்றல் தாளித்து சேர்க்கவும். நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.

  10. 10

    இப்போது மிகவும் சுவையான சத்தான நிலக்கடலை, கொத்தவரங்காய் குழம்பு சுவைக்கத்தயார்.

  11. 11

    இந்த நிலக்கடலை குழம்பு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes