கறிவேப்பிலை பொடி சாதம் (Kariveppilai podi saatham recipe in tamil)

Menaka Raj
Menaka Raj @cook_24537898

அறுசுவையில் மிக முக்கியமான கசப்புச் சுவையை அன்றாட வாழ்வில் சேர்த்து கொள்ள வேண்டும். ஆகவே மிகவும் சுவையான சுலபமான சத்தான குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் கறிவேப்பிலை பொடி சாதம் செய்முறையை இங்கு பார்க்கலாம்.(படத்தில் கசப்பு சுவை ஸ்பெஷல் : கறிவேப்பிலை சாதம், பாகற்காய் வறுவல், வெந்தய - உளுந்து வடை) #arusuvai6

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10minutes
  1. 1 ஸ்பூன் உ ளுத்தம் பருப்பு
  2. 1 ஸ்பூன் கடலை பருப்பு
  3. 1/4 ஸ்பூன் வெந்தயம்
  4. 1/4ஸ்பூன் மிளகு
  5. 3 வரமிளகாய்
  6. 1ஸ்பூன் சீரகம்
  7. 4 பூண்டு பற்கள்
  8. சிறிதளவுபுளி
  9. சிறிதுபெருங்காய தூள்
  10. தேவையான அளவுகல் உப்பு
  11. 6 நிலக்கடலை
  12. 1 கப்(கையளவு) கறிவேப்பிலை
  13. தாளிக்க : 
  14.        (தே. அ)நல்லெண்ணெய் 
  15. ,1ஸ்பூன் கடுகு,
  16. (தே. அ), முந்திரி
  17. (தே. அ), நிலக்கடலை
  18. (தே. அ)கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

10minutes
  1. 1

    வெறும் வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து, இறுதியில் கறிவேப்பிலை யை சேர்க்கவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து வறுக்கவும், தீய கூடாது.கறிவேப்பிலை நொறுங்கும் பதத்தில் ஈரமில்லமல் வறுக்க வேண்டும்.

  2. 2

    ஆறியவுடன் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்

  3. 3

    சாதம் தாளிப்பு : ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,நிலக்கடலை, முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து பின் வேகவைத்த சாதம் சேர்த்து கிளற வேண்டும். பிறகு, மிக்ஸியில் அரைத்த பொடியை சாதத்துடன் சேர்த்து கிளறி பின் அடுப்பை அணைக்கவும். சுவையான சத்தான கறிவேப்பிலை சாதம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Menaka Raj
Menaka Raj @cook_24537898
அன்று

Similar Recipes