எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
இரண்டு பேர்
  1. கால்கிலோ சேப்பங்கிழங்கு
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. அரை ஸ்பூன் கரம் மசாலா
  6. அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. அரை ஸ்பூன் மல்லித் தூள்
  8. தேவையான அளவு எண்ணெய் மற்றும் உப்பு
  9. அரை ஸ்பூன் கடுகு
  10. ஒரு கொத்து கறிவேப்பிலை
  11. சிறிதளவுகொத்தமல்லி இலை
  12. இரண்டு ஸ்பூன் தயிர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    சேப்பங்கிழங்கை நன்கு கழுவி உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு இறக்கவும் அது வெந்தவுடன் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு கறிவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் தக்காளி நன்கு வதங்கியவுடன் அதில் சிறிதளவு உப்பு மஞ்சள் தூள் கரம் மசாலா மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    அவை நன்கு வதங்கியவுடன் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து பின் நறுக்கிய கிழங்குகளை சேர்த்து வதக்கவும் 10 நிமிடம் மிதமான தீயில் கிழங்கை வதக்கவும் பின் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Magideepan
Magideepan @cook_21515130
அன்று

Similar Recipes