முருங்கைக்காய் பலாகொட்டை குழம்பு / Drumstick jackfruit seed curry receip in tamil

Afiya Parveen
Afiya Parveen @Afiya_Parveen
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 நபர்கள்
  1. 100 கிராம் சின்ன வெங்காயம்
  2. 2 முருங்கைக்காய்
  3. 1 கப் பலா கொட்டை
  4. 1 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  5. 1/4 கப் எண்ணெய்
  6. 2 மேஜை கரண்டி மிளகாய்த்தூள்
  7. 2 மேஜைக்கரண்டி மல்லி தூள்
  8. 1 தேக்கரண்டி கரம் மசாலா
  9. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  10. 3 தக்காளி
  11. 1 துண்டு தேங்காய்
  12. 1 மேஜைக்கரண்டி உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அரைத்த வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பலாக்கொட்டை சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா மல்லித் தூள் சேர்த்து வதக்கி கால் கப் தண்ணீர் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    மூடி போட்டு சிறு தீயில் 10 நிமிடம் வேக விட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பலாக்கொட்டை வெந்த பின் முருங்கைக்காய் சேர்த்து வேகவிடவும்.

  3. 3

    தேங்காய் மற்றும் தக்காளி சேர்த்து மைய அரைத்து குழம்பில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Afiya Parveen
Afiya Parveen @Afiya_Parveen
அன்று

Similar Recipes