"வெண்டைக்காய் மோர் குழம்பு"

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126

#Magazine2
#வெண்டைக்காய்மோர்குழம்பு
#குக்பேட்இந்தியா

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்.
  1. வெண்டைக்காய் மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
  2. 300மில்லிதயிர்
  3. 300மில்லிதண்ணீர்
  4. விழுதுகள் அரைக்க தேவையான பொருட்கள்:
  5. 1டேபிள் ஸ்பூன்துவரம் பருப்பு
  6. 1டேபிள் ஸ்பூன்கடலை பருப்பு
  7. 1/2இன்ச்இஞ்சி நறுக்கியது
  8. தேவையான அளவுதண்ணீர்
  9. 1துண்டு(1/4கப்)தேங்காய்
  10. 1டீஸ்பூன்சீரகம் அல்லது ஷாசீரகம்
  11. வெண்டைக்காய் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
  12. 25மில்லிபாமோலின் எண்ணெய்
  13. 100கிராம்வெண்டைக்காய்
  14. மோர் தாளிக்க தேவையான பொருட்கள்:
  15. 25மில்லிபாமோலின் எண்ணெய்
  16. 1/2டீஸ்பூன்கடுகு
  17. 1/4டீஸ்பூன்வெந்தயம்
  18. 2கொத்துகருவேப்பிலை
  19. 2காய்ந்த சிவப்பு மிளகாய்
  20. சிறிய துண்டு இஞ்சி நறுக்கியது
  21. 12சின்ன வெங்காயம்
  22. 1டீஸ்பூன்பெருங்காயம் தூள்
  23. 1/2டீஸ்பூன்மஞ்சள் தூள்
  24. தேவையான அளவுஉப்பு தூள்
  25. தேவையான அளவுகொத்துமல்லித்தழை

சமையல் குறிப்புகள்

20நிமிடம்.
  1. 1

    வெண்டைக்காய் மோர் குழம்பு செய்ய தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.

    12சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    100கிராம் வெண்டைக்காயை கட் செய்துக் கொள்ளவும்.

    1இன்ச் இஞ்சியை நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு பவுலில் 1டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு&1டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு.இரண்டையும் நன்றாக கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10நிமிடம் ஊறவைக்கவும்...

  2. 2

    மிக்ஸி ஜாரில் 1/4கப் தேங்காய் நறுக்கியது,1டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு,1டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு,1இன்ச் இஞ்சி நறுக்கியது,1டேபிள் ஸ்பூன் சீரகம் அல்லது ஷாசீரகம்,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வெண்ணையாக அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பவுலில் 300மில்லி தயிர்&300மில்லி தண்ணீர்,அரைத்த விழுதுகள் சேர்த்து விஸ்க் வைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

  3. 3

    மோர் கலவை தயார்...

  4. 4

    ஒரு பாத்திரத்தில் 25மில்லி பாமோலின் எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சூடான பிறகு 1/2டீஸ்பூன் கடுகு,1/4டீஸ்பூன் வெந்தயம்,2கொத்து கருவேப்பிலை,2காய்ந்த சிவப்பு மிளகாய்,சிறிய துண்டு இஞ்சி நறுக்கியது.அனைத்தையும் சேர்த்து தாளிக்கவும்.

    12பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு லேசான பொன் நிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.

    1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்,1டீஸ்பூன் பெருங்காயம் தூள் சேர்த்து வதக்கவும்...

  5. 5

    மோர் கலவையை குழம்பு பாத்திரத்தில் ஊற்றவும்,தேவையான அளவு உப்பு தூள் சேர்த்து கிளரவும்...

  6. 6

    ஒரு பான்-ல் 25மில்லி எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சூடான பிறகு மிதமான தீயில் வைத்து கட் செய்த வெண்டைக்காயை சேர்த்து சிறிது நேரம் வதக்கி வறுத்துக் கொள்ளவும்....

  7. 7

    வறுத்த வெண்டைக்காய்,தேவையான அளவு கொத்துமல்லித்தழை சேர்த்து ஒன்றாக கிளரவும்...விழுதுகளின் பச்சை வாசம் போகும் வரை சிறிது நேரம் நன்றாக கொதிக்கவிடவும்....

    "வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்"

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126
அன்று

Similar Recipes