ஆமவடை மோர் குழம்பு (Aamavadai morkulambu recipe in tamil)

#arusuvai4
ஆமவடை மோர் குழம்பு எங்கள் பெரியம்மாவிடம் நான் கற்றுக்கொண்டேன். அவர்கள் இதை கேதாரகௌரி விரதம் இருந்து மறுநாள் செய்வார்கள்.
ஆமவடை மோர் குழம்பு (Aamavadai morkulambu recipe in tamil)
#arusuvai4
ஆமவடை மோர் குழம்பு எங்கள் பெரியம்மாவிடம் நான் கற்றுக்கொண்டேன். அவர்கள் இதை கேதாரகௌரி விரதம் இருந்து மறுநாள் செய்வார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பு 1கப் உளுந்து பருப்பு 1/4 கப் சேர்த்து கழுவி 2மணி நேரம் ஊற விடவும். 2 டீஸ்பூன் பாசிப்பருப்பு தனியாக ஊற விடவும்.
- 2
வர மிளகாய் 5, 1 பெரிய துண்டு இஞ்சி, மிக்ஸி ஜாரில் சேர்த்து 1 முறை அரைத்த பிறகு ஊற விட்ட துவரம் பருப்பு உளுந்து பருப்பையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடைசியாக உப்பு சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டி எடுத்து வைக்கவும். 5 பல் பூண்டு,15 சின்ன வெங்காயம்,சிறிது கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து ஒரு முறை ஓட்டி எடுத்து வைக்கவும்.
- 3
அரைத்த விழுதை தனியாக எடுத்து வைக்கவும். 1/2 நறுக்கிய பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து ஊற வைத்த பாசிப்பருப்பையும் சேர்த்து கலக்கி பிசைந்து வைக்கவும்.
- 4
கடாயில் எண்ணெய் விட்டு வடைமாவை சிறிதாக தட்டி வடைகளாக சுட்டு எடுக்கவும்.
- 5
மோர் குழம்பு செய்ய 3வரமிளகாய்,4 பல் பூண்டு,8 சின்ன வெங்காயம் மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன் பெருங்காயம் சிறிதளவு இஞ்சி 1 துண்டு,சீரகம் 1டீஸ்பூன், உப்பு சேர்த்து, ஊறவைத்த துவரம்பருப்பை சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.
- 6
மோர்குழம்புக்கு அரைத்த விழுதை 2 கப் தயிரில் கலக்கி வைக்கவும்.
- 7
தாளிக்கும் கரண்டியில் 2டீஸ்பூன் ஆயில் விட்டு கடுகு 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு 1டீஸ்பூன் கறிவேப்பிலை பெருங்காயத் தூள் சிறிது சேர்த்து தாளித்து மோர்க் குழம்பில் சேர்க்கவும்.சுட்ட வடைகளை ஒரு கிண்ணத்தில் வைத்து அதன் மேலே இந்த மோர் குழம்பை ஊற்றி வைக்கவும்.
- 8
மோர் குழம்பில் வடை ஊறியவுடன் சூடானசாதத்தில் ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும். ஆமவடை மோர் குழம்பு ரெடி.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வடை மோர் குழம்பு (Vadai morkulambu recipe in tamil)
எல்லா பண்டிகைகளுக்கும் அம்மா , வடை. பாயாசம், மோர் குழம்பு செய்வார்கள். வடைகள் இப்பொழுதும் மோர் குழம்பில் தான். நானும் அதுவே விஜயதசமி அன்று செய்தேன். #pooja #GA4 # BUTTERMILK Lakshmi Sridharan Ph D -
-
டர்னிப் மோர் குழம்பு(turnip mor kulambu recipe in tamil)
#CF5 #மோர் குழம்புடர்னிப் எங்கள் தோட்டத்தில் வளர்ந்ததுதேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
பச்சை மோர் குழம்பு (Pachai morkulambu recipe in tamil)
#arusuvai4காய்கறி எதுவும் இல்லையா? இந்த ஈஸியான மோர் குழம்பு வையுங்கள். Sahana D -
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
வெள்ளை பூசணி மோர் குழம்பு (vellai poosani morkulambu recipe in tamil)
எல்லாருக்கும் விருப்பமான மோர் குழம்பு வெள்ளை பூசணி மோர் குழம்பு. ஆங்கிலத்தில் இதன் பெயர் வின்டர் மேலன் (winter melon) #arusuvai5-உவர்ப்பு#goldenapron3-melon Lakshmi Sridharan Ph D -
மோர் குழம்பு வடை (Mor kulambu vadai recipe in tamil)
#cookwithmilkமோர் குழம்பு வடை என்னுடைய சிறுவயதில் சாப்பிட்டுள்ளேன்.படுக்கி என்று எங்கள் தெருவில் எல்லராலும் அழைக்கப் படும் சௌராஷ்டிரா பெண்மணி இதை மாலை நேரத்தில் விற்பனை செய்வார். இரண்டு வடை 20 பைசாவிற்கு வாங்கி சாப்பிட்டு உள்ளேன். இன்று இந்த வடையை செய்யும் பொழுது என் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. இன்று வடை செய்ய நான்கு வகை பருப்புகள் சேர்த்துள்ளேன். இது புரதம் மிகுந்த ஸ்நாக்ஸாக இருக்கும். மோர் குழம்பு செய்யும் அன்று இதுபோல் வடை செய்து மோர்க் குழம்பில் சேர்த்து செய்தால் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். Meena Ramesh -
வெண்டக்கை மோர் குழம்பு (vendaikkai mor kulambu recipe in Tamil)
#bookதயிர் வீட்டில் அதிகம் மீதமானால் அதை மோர் குழம்பு செய்து பாருங்கள் உடனே தீர்ந்துவிடும். கோடை காலத்தில் மோர் குழம்பு உணவில் சேர்த்தால் மிகவும் உடலுக்கு நல்லது Aishwarya Rangan -
மோர் குழம்பு (Morkulambu Recipe in Tamil)
வெள்ளை பூசணி நிறைய வைட்டமின்களை கொண்டுள்ளது. வைட்டமின் A, B2, C, E உள்ளது.உடம்பில் நோய் எதிர்ப்பு சத்தை அதிகரிக்கும். #book #nutrient2 Renukabala -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
சுவையான மோர் குழம்பு, எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. #COOL Ilakyarun @homecookie -
-
சேப்பங்கிழங்கு மோர் குழம்பு
#kilanguஎனக்கு விருப்பமான கிழங்குகளில் சேப்பங்கிழங்கு ஒன்று. மோர் குழம்பு செய்வதற்க்கு ஏற்ற குழம்பு. குழம்புக்கு புரதம் சேர்க்க, குழம்பாய் கெட்டியாக்க எப்பொழுதும் வேகவைத்த பயத்தம் பருப்பை சேர்ப்பேன். தேங்காய் பேஸ்ட் பொருட்களில் ஒன்று. சத்து சுவை நிறைந்த சேப்பங்கிழங்கு மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
கீரை மோர் குழம்பு (Green leaves buttermilk gravy recipe in tamil)
மோர் குழம்பு நிறைய காய்கறிகள் வைத்து செய்யலாம். நான் தண்டங்கீரைசேர்த்து செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#CF5 Renukabala -
வடை மோர் குழம்பு(Vadai morkulambu recipe in tamil)
கலைப்பருப்பு 100ஊறப்போட்டு இஞ்சி சிறிது,2வரமிளகாய்,உப்பு, பெருங்காயத்தூள் சிறிது போட்டு உப்பு ,தேவையான அளவு,சீரகம், சோம்புபோட்டு குட்டி வடையாக போடவும்.மோர் 1டம்ளர் எடுக்க. கடலைப்பருப்பு,2ஸ்பூன்,து.பருப்பு 1ஸ்பூன்,அரிசி அரை ஸ்பூன் போட்டு ஊறவைத்து சீரகம் சிறிது,தேங்காய் கொஞ்சம், வெங்காயம் 3,பச்சை மிளகாய் 1 அரைத்து மோரில் கலக்கவும். பின் கடாயில் கடுகு, உளுந்து ,வெந்தயம் ,பெருங்காயம் ,வரமிளகாய் 2, வறுத்து பெரியவெங்காயம் வெட்டியதை வதக்கவும் வடைகளை போடவும்.அரைத்த கலவை மோர் ஊற்றி நுரை வரவும் இறக்கவும். மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மோர் குழம்பு மிகவும் பிடித்த ஒரு ரெசிபி. அதற்கு உருளைக்கிழங்கை பச்சையாக நறுக்கி வறுத்தும், எலுமிச்சை ஊறுகாயும் பெஸ்ட் காம்போ. Laxmi Kailash -
வெள்ளை பூசணிக்காய் மோர் குழம்பு
மோர் பிடிக்காதவர்கள் கூட இந்த மோர் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
மஞ்ச மோர் குழம்பு (Manja mor kulambu recipe in tamil)
#GA4Week1#yogurtமஞ்ச மோர்க்குழம்பு எங்கள் வீட்டில் திடீரென்று விருந்தாளிகள் வந்தால் இந்த மோர் குழம்பை செய்து விருந்தினர்களை அசத்தி விடுவோம்.😍😍 Shyamala Senthil -
-
தர்பூஷணி தோல் மோர் குழம்பு(watermelon rind buttermilk curry recipe in tamil)
#made4 - மோர் குழம்பு .நார்மலா பாரம்பர்ய முறையில் மோர் குழம்பு செய்யும்போது வெள்ளை, மஞ்சள் பூசணிக்காய், வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து செய்வார்கள். ஒரு மாறுதாலுக்காக தர்பூஷணி தோல் சேர்த்து முயற்சி செய்து பார்த்தேன்,வெள்ளை பூசணிக்காவில் செய்வது போல் மிக சுவையாக இருந்துது.... Nalini Shankar -
-
-
-
காய்கறி இல்லா மோர் குழம்பு(plain mor kulambu recipe in tamil)
#CF5 மோர் குழம்புOஇதில் பெருங்காயம், சீரகம் போடுவதால் ரொம்பவும் சுவையாக இருக்கும். காய்கறிகளும் பதில் கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்து செய்து உள்ளேன். மிகவும் ருசியாக இருந்தது தயா ரெசிப்பீஸ் -
நீர் பூசணிக்காய் மோர் குழம்பு (Neer poosanikkaai morkulambu recipe in tamil)
#arusuvai4 BhuviKannan @ BK Vlogs -
* சௌசௌ மோர் குழம்பு*(chow chow mor kuambu recipe in tamil)
@ PriyaRamesh ரெசிபி #CF5என்னிடம் சின்ன வெங்காயம் இல்லாததால் அதனை போடவில்லை.புளித்த மோர் இருந்தால் சட்டென்று செய்துவிடலாம்.இந்த ரெசிபி, பிரியா ரமேஷ் அவர்கள் செய்தது. நான் இந்த, * சௌசௌ மோர் குழம்பை* செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
சுரைக்காய் மோர் குழம்பு (Bottle gourd butter milk curry recipe in tamil)
#TheChefStory #Atw3மோர் குழம்பு நிறைய விதமான காய்களை வைத்து செய்கிறார்கள்.நான் வித்யாசமாக சுரைக்காய் வைத்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
பருப்பு உருண்டை மோர் குழம்பு
#milkபருப்பு உருண்டை சுவை புரத சத்து நிறைந்தது. புளி குழம்பில் சேர்க்காமல் மோர் குழம்பில் சேர்த்தேன் ஸ்ரீதர்க்கு பருப்பு உருண்டை மோர் குழம்பு அதிக விருப்பம். எண் தோட்டத்து தாவர மூலிகைகள் பேசில் , பார்சலி, கொத்தமல்லி, கறிவேப்பிலை உலோக சத்துக்கள், விடமின்கள் நிறைந்தவை. தேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
அப்பள வத்தல் குழம்பு / appalam Vathal Kuzhambu Recipe in tamil
#magazine2பாரம்பரிய முறையில் செய்த கார சாரமான குழம்பு. சுண்டைக்காய், கத்திரிக்காய் வத்தல்கள், அப்பள துண்டுகள் சேர்ந்த குழம்பு. . ஸ்ரீதர் அம்மா அப்பள துண்டுகள் சேர்ப்பார்கள். எங்க அம்மா அப்பள துண்டுகள் சேர்க்காமல் மெந்திய வாசனை தூக்கும்படி செய்வார்கள். அவர்கள் இருவரும் வேகவைத்த பருப்பு தக்காளி சேர்க்க மாட்டார்கள்; நான் சேர்ப்பேன். எங்கள் மூவருடைய கை மணம் கலந்த ரெஸிபி இது Lakshmi Sridharan Ph D -
யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். உங்களுக்கு விருப்பமான வத்தலை இந்த குழம்பில் சேர்க்கலாம் #ve Lakshmi Sridharan Ph D
More Recipes
- எலுமிச்சை சேமியா (Elumichai semiya recipe in tamil)
- தக்காளி புலாவ் (Thakkaali pulao recipe in tamil)
- கதம்பச் சட்னி (Kathamba chuutney recipe in tamil)
- கோன்குரா பப்பு –புளிச்சை கீரை பருப்பு (Pulicha keerai paruppu recipe in tamil)
- மோர் ஜவ்வரிசி வேர்க்கடலை உப்புமா (Mor javvarasi verkadalai upma recipe in tamil)
கமெண்ட் (10)