கதம்ப சாம்பார்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#magazine 2 - கலயாணம் மற்றும் விசேஷங்களில் வீடுகளில் செய்ய கூடிய நிறைய காய்கள் சேர்த்து செய்யும் சுவை மிக்க சாம்பார்.. ..என்னுடைய செமுறையில்...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 1கப் வேக வைத்த துவரம் பருப்பு
  2. 2கப் காய்கறிகள் உங்கள் விருப்பதுக்கேத்த.
  3. எலுமிச்சை அளவுபுளி, கெட்டி பெருங்காயம்
  4. 4-5 ஸ்பூன் வீட்டில் வறுத்து பொடித்த பிரெஷ் சாம்பார் பவுடர்
  5. 2பச்சை மிளகாய்
  6. தாளிக்க
  7. 1ஸ்பூன் கடுகு
  8. 1ஸ்பூன்சீரகம், வரமிளகாய்
  9. கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை
  10. 2 ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    துவரைம்பரூப்புடன் மஞ்சள்தூள், கட்டி பெருங்காயம், ஒரு ஸ்பூன் நெய் மற்றும் கைப்பிடி அளவு பச்ச கொத்தமல்லி தண்டு சேர்த்து நன்கு குழய வேக விட்டு எடுத்து வைத்துக்கவும்.

  2. 2

    ஸ்டவ்வில் ஒரு பாத்திரம் வைத்து தண்ணி ஊற்றி கொதி வந்த பிறகு வெட்டி வைத்திருக்கும் காய்கள் - முருங்கைக்காய், கத்திரிக்காய், பரங்கிக்கை, தக்காளி, அவரைகாய், பச்சை மிளகாய் கீறி போட்டு வேக விடவும். உங்கள் விருப்பதுக்கேத்த காய்கள் சேர்த்துக்கவும்

  3. 3

    பாதி வெந்த பிறகு அத்துடன் புளி தண்ணி, தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்,

  4. 4

    புளியின் பச்சை வாசம் போன பிறகு அதில் சாம்பார் தூள் மற்றும் வேக வைத்து வைத்திருக்கும் துவரம் பருப்பு சேர்த்து நன்கு கலந்து தேவைக்கு தண்ணி சேர்த்து கொதிக்க விட்டு ஸ்டாவ்வ் ஆப் செய்து பச்சை கொத்தமல்லி தூவி இறக்கவும்.

  5. 5

    ஒரு கரண்டியில் நெய் + எண்ணெய் கலந்து ஸ்டவ்வில் வைத்து கடுகு, சீரகம், 2வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து சாம்பாரில் சேர்க்கவும்.... கம கமா மணமுடன் சுவையான கதம்ப சாம்பார் தயார்... சாதம், தோசை, இட்லி யுடன் சேர்த்து சாப்பிட மிக அருமையான காம்பினேஷன். காரம், புளி, உப்பு அவரவர் விருப்பதற்கு ஏற்றது..

  6. 6

    குறிப்பு - துவரம் பருப்புடன் நெய், சேர்த்து வேக வைக்கிறது தான் ஸ்பெஷல் விசேஷ சாம்பார்.. இதில் தேங்காய் சேர்க்க வில்லை, விரும்பினால் தேங்காய் துருவல், சாம்பார் தூளுடன் மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி எடுத்து சாம்பரில் சேர்த்துக்கவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

கமெண்ட்

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes