சக்கரை பொங்கல்

manu
manu @nidhu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4பேர்
  1. பச்சரிசி - முக்கால் கப்
  2. பாசிப் பருப்பு - கால் கப்
  3. நெய் கால் கப்
  4. முந்திரி திராட்சை - தலா 50 கிராம்
  5. வெல்லம் - ஒன்றரை கப்
  6. பால் - ஒரு கப்
  7. ஏலக்காய் - 4

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் நன்றாக கழுவி உப்பு சேர்த்து இரண்டு கப் தண்ணீர், ஒரு கப் பால் சேர்த்து குக்கரில் வேகவிடவும். வெல்லத்தை பொடி செய்து கொள்ளவும்.

  2. 2

    வாணலில் வெல்லத்தை சிறிது நீர் ஊற்றி கரைத்து கொதிக்கவிடவும். முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். வெல்லக் கரைசலை வேக வைத்த அரிசி பருப்புடன் ஊற்றி, முந்திரி திராட்சை சேர்த்து கலக்கவும்.

  3. 3

    மீதமுள்ள நெய்யை ஊற்றி, ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பை சிறியதாக வைத்து 5 நிமிடம் கிளறவும். தேவைப்பட்டால் அரை கப் பால் சேர்க்கவும்.

  4. 4

    சுவையான சக்கரைப் பொங்கல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

manu
manu @nidhu
அன்று

Similar Recipes