இந்தியன் கேரட் பக்கோடா(Carrot pakoda recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#asma
#npd1
இது என்னுடைய முதல் அனுபவம்.👩‍🍳🔥✨💯..நான் இன்று செய்த இந்த ரெசிபி எனக்கு மிக முன் உதாரணமாக கொண்டுவந்தது எதுவென்றால் கேரட் உடைய வண்ணம்தான்🟠.ஆகையால் நான் கேரட் தலைப்பை தேர்ந்தெடுத்து உள்ளேன் இது மிகவும் எளிதான பொருட்களை வைத்து நாம் செய்வதுதான் கேரட் பக்கோடா🥕 முக்கியமாக கோதுமை மாவு சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது..... கேரட் பிடிக்காதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.😍.... ஒரு செயலியில் நான் போடுவது இது தான் எனக்கு முதல் அனுபவம் 👩‍🍳பிடித்தவர்கள் இதற்கு லைக்👍 செய்யவும், பின்தொடரவும் ,இதை செய்து பார்த்து கமெண்ட்✍️ செய்யவும்... ஷேர்🔜 செய்யவும் நன்றி....💐🙏❣️

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. 3 கேரட்
  2. 4 தேக்கரண்டி கோதுமை மாவு
  3. 1 வெங்காயம்
  4. 2 பச்சை மிளகாய்
  5. சிறிது அளவுகருவேப்பிலை
  6. சிறிதளவுபுதினா
  7. சிறிது அளவுகொத்தமல்லி இலை
  8. 2 தேக்கரண்டி அரிசி மாவு
  9. 2 தேக்கரண்டி கடலை மாவு
  10. 2 தேக்கரண்டி சோள மாவு
  11. ¼ தேக்கரண்டி சோடா மாவு
  12. 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
  13. மசாலா பொருட்கள்
  14. 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  15. ¼ தேக்கரண்டி மஞ்சத்தூள்
  16. ¼ தேக்கரண்டி கறிமசால் தூள்
  17. ¼ தேக்கரண்டி ஜிலேபி தூள்
  18. தேவையான அளவுஉப்பு
  19. ¼ லிட்டர் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மேலே கூறிய அனைத்து பொருள்களையும் சேர்க்கவும். தேவைப்பட்டால் சுவைக்காக 10 பீன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.

  2. 2

    பின்பு மாவுப் பொருட்கள் மற்றும் மசாலா பொருட்கள் அனைத்தையும் கட்டி சேராமல் கலக்கி கொள்ளவும்.
    இவை அனைத்தும் நன்றாக மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பக்கோடா பதத்திற்கு கொண்டு வரவும்...

  3. 3

    ஒரு கடாயில் எண்ணையை ஊற்றி நன்றாக எண்ணை காய்ந்ததும் அடுப்பை குறைத்து, பக்கோடா போல் போட வேண்டும். சரியாக மூன்று நிமிடம் கழித்து பொரித்து எடுக்கவும்...

  4. 4

    இறுதியில் மேலே சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான இந்தியன் கேரட் பக்கோடா 🥕🥕 தயார்....😍💯

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
அன்று

Similar Recipes