சிக்கன் மிளகு கறி(PEPPER CHICKEN RECIPE IN TAMIL)

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கி சிக்கன்
  2. 2 ஸ்பூன் குண்டு மல்லி, மிளகு
  3. 2வத்தல், கிராம்பு
  4. 1 ஸ்பூன் சீரகம், சோம்பு
  5. 2 வெங்காயம், தக்காளி
  6. 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  7. தேவைக்கேற்ப எண்ணெய், தண்ணீர்
  8. தேவையான அளவுஉப்பு
  9. கைப்பிடி அளவு கருவேப்பிள்ளை, மல்லி, புதீனா
  10. 1/2 கப் தயிர்
  11. 1/2 ஸ்பூன் மஞ்சள்த்தூள்
  12. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சிக்கனை நன்றாக கழுவி 1/2 கப் தயிர் மற்றும் 1/4 ஸ்பூன் மஞ்சளில் 15 நிமிடம் ஊற வைக்கவும்

  2. 2

    ஒரு கடாயில் மேற்கூறிய அளவுகளில் பட்டை,கிராம்பு, வத்தல், சீரகம், சோம்பு, குண்டு மல்லி, மிளகு அனைத்தையும் கருகாமல் வெறும் வருப்பாக வருத்து சூடு ஆறியதும் பொடியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    பின் அதே கடாயில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி அதில் 1 ஸ்பூன் சீரகம் மற்றும் சிறிதாக நறுக்கிய 2 வெங்ஙாயம் போட்டு வதக்கவும்

  4. 4

    பின் சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து வதக்கவும் பிறகு 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பின் 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள் சேர்க்கவும்

  5. 5

    பிறகு 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் பின் அரைத்து வைத்த மிளகு கலவைத் தூள்களச் சேர்த்து வதக்கவும்

  6. 6

    பிறகு 2 தக்காளியை வதக்கவும் வதங்கியதும் 1 கி சிக்கனைச் சேர்க்கவும்

  7. 7

    பின் கிளறவும் சிக்கனில் தண்ணீர் விடும் என்பதால் சிறிதளவு தண்ணீர் சேர்த்தால் போதுமானது எனவே மசால் அரைத்த ஜாரில் தண்ணீர் ஊற்றி அதைச் சேர்த்துக் கொள்ளவும் பின் கைப்பிடி அளவு மல்லி, புதீனா இலைகளை தூவவும்

  8. 8

    பின் கொதித்து தண்ணீர் வற்றியதும் சூடாக பரிமாறவும் சுவையாக இருந்தது

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
அன்று

Similar Recipes