பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#ap week 2
சிக்கனில் கால்சியம் விட்டமின் ஏ டி சி பி6 அயன் மேலும் பல சத்துக்கள் உள்ளது.

பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)

#ap week 2
சிக்கனில் கால்சியம் விட்டமின் ஏ டி சி பி6 அயன் மேலும் பல சத்துக்கள் உள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15-20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1/2 கிலோ சிக்கன்
  2. 1 -2 பெரிய வெங்காயம்
  3. 3பச்சை மிளகாய்
  4. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1 டீஸ்பூன் மிளகு தூள்
  6. 2 டீஸ்பூன் தனியா தூள்
  7. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1எழுமிச்சை
  9. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  10. 2 ஸ்பூன் தயிர்
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. 2 ஸ்பூன் எண்ணெய்
  13. கருவேப்பிலை சிறிதளவு
  14. மல்லித்தழை சிறிதளவு
  15. 1/2 டீஸ்பூன் பட்டை தூள்
  16. 1/2 டீஸ்பூன் கிராம்பு தூள்

சமையல் குறிப்புகள்

15-20 நிமிடம்
  1. 1

    சிக்கனுடன் இஞ்சி பூண்டு விழுது உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் எழுமிச்சை பிழிந்து எல்லாவற்றையும் நன்றாக கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவேப்பிலை பட்டை, கிராம்பு தூள்,வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.பொன்னிறம் ஆனதும் பச்சை மிளகாய் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக கிளறி விடவும்

  3. 3

    தயிர் சேர்க்கவும்.தனியா மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.குக்கரை மூடி நன்றாக வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.வெந்த பின்பு தண்ணீர் இருந்தால் விருப்பத்திற்கு ஏற்ப வற்ற விட்டு மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும்

  4. 4

    காரசாரமான ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes