மொறு மொறு பட்டர் தட்டை(thattai recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#CF2
எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக் தட்டை.. வெண்ணை சேர்த்து செய்த கார சாராமான மொறு மொறு தட்டை...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30-45 நிமிடங்கள
40 பீஸ்
  1. 2- கப் புழுங்கல் அரிசி மாவு
  2. 1/2கப் உளுத்தம் மாவு
  3. 1/2கப் பொட்டுக்கடலை மாவு
  4. 2 டேபிள்ஸ்பூன் வெண்ணை
  5. 1 டேபிள்ஸ்பூன் ஊற வைத்த கடலை பருப்பு
  6. 2 ஸ்பூன் மிளகாய் தூள்
  7. தேவைக்குபெரும்காயம், உப்பு
  8. 1கைப்பிடி பொடியாக நறுக்கின கருவேப்பிலை
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

30-45 நிமிடங்கள
  1. 1

    முதலில் இட்லி புழுங்கல் அரிசியை நன்கு 3 வாட்டி சுதமான தண்ணீரில் கழுகி 2 மணி நேரம் ஊற விட்டு கிரைண்டரில் நன்றாக் கட்டியாக அரைத்து எடுத்து வைத்துக்கவும்

  2. 2

    அத்துடன் உளுத்தம் மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு,தேவையான மிளகாய் தூள், சேர்த்து நன்கு கலந்து பிசைந்துக்கவும்

  3. 3

    அத்துடன் ஊற வைத்த கடலைப்பருப்பு, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து பிசைந்து, வெண்ணை சேர்த்து எல்லாம் நன்றாக கலந்து பிசைந்து வைத்துக்கவும்

  4. 4

    அதிலிருந்து சிறு உருண்டைகள் செய்து எல்லாவற்றையும் தட்டை போல் சமமாக சுதமான கிளாத்தில் அல்லது போ லித்தீன் ஷீட்டில் தட்டி வைத்துக்கவும்

  5. 5

    ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் மிதமான சூட்டில். தட்டையை எண்ணையில் போட்டு நன்கு வேகவிட்டு ஓசை அடைங்கியதும் எடுத்து விடவும்

  6. 6

    வெண்ணையின் வாசமுடன் சுவையான கார சாரமான மொறு மொறு தட்டை தயார்... செய்து பார்த்து சுவைக்கவும்...இந்த அளவிற்கு 35 - 40 தட்டை வரை கிடைக்கும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes