அவியல்(aviyal recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#CF2
எல்லா காய்கறிகளையும் சேர்த்து செய்வது தான், * அவியல்*. இந்த ரெசிபியை தீபாவளிக்கு செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.தேங்காய் எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை.இதற்கு தாளிக்கக் கூடாது.தீபாவளி ரெசிப்பீஸ்

அவியல்(aviyal recipe in tamil)

#CF2
எல்லா காய்கறிகளையும் சேர்த்து செய்வது தான், * அவியல்*. இந்த ரெசிபியை தீபாவளிக்கு செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.தேங்காய் எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை.இதற்கு தாளிக்கக் கூடாது.தீபாவளி ரெசிப்பீஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3/4மணி
10பேர்
  1. 1முழு தேங்காய்
  2. 150கிராம்உருளை
  3. 100 கிராம்சேப்பங்கிழங்கு
  4. 1 பெரிய துண்டுசேனைக்கிழங்கு
  5. 1வாழைக்காய்
  6. 1தக்காளி
  7. 100 கிராம்கேரட்
  8. 50 கிராம்பீன்ஸ்
  9. 1 பெரிய துண்டுவெள்ளை பூசணி
  10. 1 சிறு துண்டுபரங்கிக்காய்
  11. 10ப.மிளகாய்
  12. ருசிக்குஉப்பு
  13. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  14. 2 டேபிள் ஸ்பூன்தேங்காய் எண்ணெய்
  15. 2 கப்புளிக்காத தயிர்
  16. தேவைக்குதண்ணீர்

சமையல் குறிப்புகள்

3/4மணி
  1. 1

    உருளை கிழங்கையும், சேப்பங்கிழங்கையும் இரண்டு துண்டுகளாக நறுக்கி உப்பு போட்டு குழையாமல் வேக வைத்து ஆறினதும் தோலுரித்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு முழு தேங்காயை(2மூடி) சிறுசிறு துண்டுகளாக்கி, அதனுடன், ப.மிளகாய் சேர்த்து தண்ணீரை தெளித்து, மிக்ஸியில் மைய விழுதாக அரைக்கவும்.

  3. 3

    மீதமுள்ள காய்கறிகளை பெரிய பாத்திரத்தில் போட்டு சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி, உப்பு போட்டு தண்ணீர் விட்டு வேக விடவும்.

  4. 4

    முக்கால் வாசி வெந்ததும்,வேக வைத்த உருளை கிழங்கு, சேப்பங்கிழங்கை போடவும்.

  5. 5

    ஒன்று சேர வெந்ததும், அடுப்பை சிறிய தாக்கி,அரைத்த விழுதை போடவும்.

  6. 6

    காய்கறிகள் வெந்து கெட்டியானதும்,அடுப்பை நிறுத்தி விட்டு மேலே, தேங்காய் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை போடவும்.

  7. 7

    சுவையான, * அவியல்* தயார். இதற்கு தாளிக்க வேண்டாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes