* வெஜ் சம்பா ரவை, கொழுக்கட்டை*(wheat rava veg kolukattai recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#made1
சம்பா ரவையில் புரதச்சத்து, நார்ச்சத்து, துத்தநாகச் சத்து, இரும்பு சத்து,அதிகம் உள்ளது.துத்தநாகச் சத்து உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.காய்கறிகள் சேர்த்து செய்வதால் கூடுதல் பலன் கிடைக்கின்றது.

* வெஜ் சம்பா ரவை, கொழுக்கட்டை*(wheat rava veg kolukattai recipe in tamil)

#made1
சம்பா ரவையில் புரதச்சத்து, நார்ச்சத்து, துத்தநாகச் சத்து, இரும்பு சத்து,அதிகம் உள்ளது.துத்தநாகச் சத்து உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.காய்கறிகள் சேர்த்து செய்வதால் கூடுதல் பலன் கிடைக்கின்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
6 பேர்
  1. 2 கப்சம்பா ரவை
  2. 1வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 2குடமிளகாய்(சிறியது)
  5. 1உருளை கிழங்கு
  6. 2ப.மிளகாய்
  7. 1 ஸ்பூன்உ.பருப்பு
  8. 1 ஸ்பூன்க.பருப்பு
  9. 1 டீ ஸ்பூன்கடுகு
  10. ருசிக்குகல்லுப்பு
  11. 2 டேபிள் ஸ்பூன்தே.எண்ணெய்
  12. 3 3/4 கப்தண்ணீர்
  13. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  14. 1 டீ ஸ்பூன்பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    3 3/4 கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.

  2. 2

    காய்கறிகளை பொடியாகவும், ப.மிளகாயை கீறியும் வைத்துக் கொள்ளவும்.கடாயில் தே.எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போடவும். கடுகு பொரிந்ததும், கபருப்பு, உ.பருப்பு போடவும்.

  3. 3

    பருப்புகள் சிவந்ததும், நறுக்கின வெங்காயம், சிறிது உப்பு போட்டு நன்கு வதக்கவும்.பிறகு, தக்காளி, ப.மிளகாய் போடவும்.பின் உருளை கிழங்கை போடவும்.

  4. 4

    பிறகு குடமிளகாயை போட்டு நன்கு வதக்கவும்.காய்கறிகள் வதங்கியதும்,அடுப்பை சிறியதில் வைத்து, சம்பா கோதுமை, 1 ஸ்பூன் தே.எண்ணெய் விடவும்.

  5. 5

    பின் நன்கு கிளறி, கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி, பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, போட்டு 5 நிமிடம் மூடி வேக விடவும்.

  6. 6

    முக்கால் பங்கு ரவை வெந்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு, ஆறினதும், கொழுக்கட்டை போல் பிடித்து,இட்லி குக்கர் தட்டில் தே.எண்ணெய் தடவி பிடித்ததை வைத்து 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.பிறகு தட்டில் மாற்றவும்.

  7. 7

    இப்போது ஆவியில் வெந்த, சுவையான, ஆரோக்கியமான, வித்தியாசமான,* வெஜ் சம்பா ரவை கொழுக்கட்டை* தயார்.(இட்லி தட்டில் வைத்து எடுத்ததை புகைப்படமாக எடுக்க மறந்துவிட்டேன்)இது தேங்காய் சட்னி, காரச் சட்னி,தக்காளி சட்னி, சாம்பார் நல்ல காம்பினேஷன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes