இனிப்பு பணியாரம்(sweet paniyaram recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

இனிப்பு பணியாரம்(sweet paniyaram recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 டம்ளர் ஈர அரிசி மாவு
  2. 4 ஸ்பூன் பொடியாக நறுக்கிய தேங்காய்
  3. 1/2 கப் பொடித்த வெல்லம்
  4. 1சிறு துண்டு சுக்கு
  5. 2 ஏலக்காய்
  6. 2 வாழைப்பழம்
  7. 4 ஸ்பூன் நெய்
  8. தேவைக்கேற்பஆயில்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாழைப்பழத்தை நன்கு மசிக்கவும். பொடியாக நறுக்கிய தேங்காய் நெய் விட்டு சிவக்க வறுக்கவும்.

  2. 2

    சுக்கு ஏலக்காய் நன்கு பொடியாக்கவும். வெல்லத்தை முக்கால் டம்ளர் தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து கரைத்து வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு தேங்காய், ஏலப்பொடி, கரைத்த வெல்லப்பாகு, மசித்த வாழைப்பழம்,சேர்த்து நன்கு கெட்டியாகக் கலந்து விடவும்.

  3. 3

    அடுப்பில் பணியார கல்லை வைத்து சூடு செய்து ஆயில் அல்லது நெய் விட்டு மாவை பணியாரமாக சுட்டு எடுக்கவும் சுவையான இனிப்பு பணியாரம் தயார்.

  4. 4

    வெல்லத்திற்கு பதில் கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும்செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soundari Rathinavel
அன்று

Similar Recipes