காலிஃப்ளவர் மஞ்சூரியன்(cauliflower manchurian recipe in tamil)
#CF9 Christmas special
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் காலிஃப்ளவரை போட்டு எடுத்துக் கொள்ளவும்.
- 2
பின்னர் அதனுடன் கான்பிளவர், மாவு கடலை மாவு, மிளகாய்த்தூள், இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு பிசறி வைத்துக் கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் நன்கு காய்ந்த உடன் பிசிறி வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சீரகம், காய்ந்த மிளகாய் தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின்னர் சதுரமாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் குடை மிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
பின்னர் அதனுடன் சிறிதளவு மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும் இரண்டு நிமிடம் வதங்கிய பின்னர் தக்காளி சாஸ் மற்றும் சோயா சாஸ் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி கொதிக்க விடவும். நன்கு கொதித்த பின்னர் அதனுடன் பொரித்து வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும்.
- 6
பின்னர் அதனுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான காலிஃப்ளவர் மஞ்சூரியன் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
முட்டை ப்ரெடு நூடுல்ஸ் மற்றும் சோயா மஞ்சூரியன்
#Combo special 5 வீட்டில் சுவையான அற்புதம் நூடுல்ஸ் மற்றும் மஞ்சூரியன்.saboor banu
-
-
-
-
-
-
-
-
-
-
இட்லி மஞ்சூரியன்(Idli manchurian recipe in tamil)
#onwrecipeஇட்லி அனைவருக்கும் உகந்த ஒரு டிபன் ஆகும் இது எளிதில் ஜீரணமாகக் கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது எல்லா காலங்களிலும் சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
More Recipes
கமெண்ட்