மிளகு காராச்சேவு (Pepper kaara sev recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#m2021 இந்தக் காராச்சேவு என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 2கப் கடலை மாவு
  2. 1/2கப் அரிசி மாவு
  3. 1ஸ்பூன் பெருங்காயம்
  4. 10பல் பூண்டு
  5. 2ஸ்பூன் மிளகு
  6. தேவையானஅளவு உப்பு
  7. பொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மிளகை கொரகொரப்பாக பொடி செய்து எடுத்துக் கொள்ளவும் முழுதாக போட்டால் வெடிக்கும்.. பூண்டை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்..

  2. 2

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பச்சரிசி மாவு, பூண்டு, மிளகுத் தூள், பெருங்காயம், தேவையான அளவு உப்பு, சூடான எண்ணெயில் இருந்து ஒரு சிறிய குழிக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து தண்ணீர் சிறிது சிறிதாக விட்டு இளக்கமாக பிசைந்துகொள்ளவும்... கெட்டியாக பிசைந்தால் தேய்ப்பதற்கு கடினமாக இருக்கும்...

  3. 3

    இப்போது நம்ம வீட்டிலுள்ள ஜல்லி கரண்டியில் செய்யலாம்... அல்லது முறுக்கு பிழியும்அச்சிலும் பிழிந்து கொள்ளலாம்..

  4. 4

    முதலில் ஜல்லி கரண்டியில் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.. மாவிலிருந்து சிறிது எடுத்து ஜல்லி கரண்டியின் மேல் வைத்து சூடான எண்ணெயில் தேய்த்தால் அடியில் அழகாக விழும்

  5. 5

    எண்ணையில் சலசலப்பு அடங்கியதும் காரச்சேவை எடுத்துவிடவும்

  6. 6

    முறுக்கு அச்சில் போட்டும் பிழியலாம்... அச்சில் லேசாக எண்ணைய் தடவி அதில் மாவை போட்டு பிழிந்து எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்

  7. 7

    இது மழை நேரத்திலும் குளிர் நேரத்திலும் சூடான காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்... நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes