பூண்டு கார சட்னி(poondu kara chutney recipe in tamil)

Tamilmozhiyaal
Tamilmozhiyaal @ArogyamArusuvai

#wt1 பச்சையா பூண்டு சட்னி அரைச்ச போது எங்க வீட்ல பிடிக்கல சொல்லிட்டாங்க... நாக்கு விர் விர்னு இருக்கும் பாருங்க.. அது அவங்களுக்கு பிடிக்கல... சரி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி, தேங்காய் சட்னியோட பூண்டு சட்னி ஒரு செய்முறை இருந்தா அவசரத்துக்கு கைக்கொடுக்கும்னு மிளகாய் அளவு புளி அளவுன்னு மாத்தி மாத்தி இரண்டு மூனு முறை செஞ்சு பார்த்தேன்... கடைசியா இந்த செய்முறை எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சுடுச்சு... நல்லெண்ணெய் கொஞ்சம் அதிகம் செலவாகும்😜😜... பரவாயில்லை என்னைக்கோ ஒரு நாள் தான....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 25 - 30 பல் பூண்டு. பெரிசா இருந்தா 15 - 20 எடுத்தக்கலாம்
  2. 1 தக்காளி
  3. 8பச்சமிளகாய் விதை நீக்கியது
  4. ஒரு துண்டுபுளி
  5. தேவைக்கேற்ப நல்லெண்ணெய்
  6. தாளிக்க கடுகு உளுந்து

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பூண்ட உரிச்சு வச்சுக்கோங்க... தக்காளி நறுக்கி வச்சுட்டு, பட்டை மிளகாய் விதை நீக்கி வச்சுக்கோங்க..

  2. 2

    கடாய் அடுப்புல வச்சு நல்லெண்ணெய் ஊத்தி காஞ்சதும், புளி தவிர மீத மூனு பொருளையும் போட்டு வதங்க விடனும்.. இந்த அளவு வதங்கினதும், ஆற வச்சு அரைச்சு அதே கடாய்ல மறுபடி நல்லெண்ணெய் ஊத்தி தாளிக்கனும்...

    அரைச்சு தாளிக்கும் போது நிறைய நல்லெண்ணெய் ஊத்தினா நல்லாருக்கும்...

  3. 3

    மிக மிக சுவையான, கார சாரமான பூண்டு சட்னி தயார்.. இட்லி கூட அட்டகாசமா இருக்கு... முயற்சி செய்து பாருங்க...

    ஆனந்தமா சாப்பிடுங்க...
    ஆரோக்கியமாக இருங்க....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tamilmozhiyaal
Tamilmozhiyaal @ArogyamArusuvai
அன்று
நான் நான்சி மெர்வின்., புனை பெயர் தமிழ்மொழியாள்.. நான் ஒரு பதினைஞ்சு வருசம் hostel ல இருந்தேங்க... அதோட தாக்கம் கல்யாணத்துக்கு அப்பறம் என்ன ஒரு சிறந்த சமையல் கலைஞியா மாத்திடுச்சு😜😜😜... hostel வாழ்க்கையில எனக்கு கிடைக்காத அறுசுவையையும், ஆரோக்கியத்தையும் தேடி தேடி தேடி சமைச்சு இப்போ ரொம்ப ரொம்ப ரொம்ப ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கோம்...என் கணவருக்கும் என் சாப்பாடுன்னா ரொம்ப பிடிக்கும்... அவங்களுக்காக தான் fried rice ல இருந்து bread வரை எந்த chemical ம் chemical preservative ம் சேர்க்காம வீட்லயே செஞ்சு பழகிட்டு செஞ்சு கொடுத்து ஆனந்தமா சாப்பிடுறோம்.. ஆரோக்கியமாக இருக்கோம்...
மேலும் படிக்க

Similar Recipes