செட்டிநாடு கத்தரிக்காய் மசாலா (Chettinad brinjal masala recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
  1. 1/4 கிலோ கத்தரிக்காய்
  2. 1தக்காளி
  3. 1வெங்காயம்
  4. 1டீஸ்பூன் தனியா த்தூள்
  5. 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. தேவையான அளவுஉப்பு
  8. தாளிக்க :
  9. 1/4 டீஸ்பூன் சோம்பு
  10. ஒரு சிறிய துண்டு பட்டை
  11. 1பிரிஞ்சி இலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கத்தரிக்காயை காம்பு நீக்கி நீளமாக நான்காக நறுக்கி தண்ணீரில் போடவும்.

  2. 2

    கத்தரிக்காய் மசாலாவுக்கு தேவையான மற்ற பொருட்கள் எல்லாம் எடுத்து வைக்கவும்.

  3. 3

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் பட்டை, சோம்பு, பிஞ்சி இலை சேர்த்து பொரிந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின்னர் தக்காளி சேர்த்து வதக்கி, தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

  5. 5

    அத்துடன் நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து நன்கு கலந்து, கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

  6. 6

    பின்னர் எடுத்து று முறை கலந்து உப்பு சரிபார்த்து இறக்கினால் செட்டிநாடு கத்தரிக்காய் மசாலா தயார்.

  7. 7

    தயாரான கத்தரிக்காய் மசாலாவை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.

  8. 8

    இப்போது சுவையான செட்டிநாடு கத்தரிக்காய் மசாலா சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes