பிஸ்தா டீ(pista tea recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#LRC
கேக் செய்து,மீதமிருந்த பிஸ்தா பருப்பு பொடியை பயன்படுத்தி செய்த இந்த டீ, மிக மிக சுவையாகவும், வசனையாகவும் இருக்கும்.

பிஸ்தா டீ(pista tea recipe in tamil)

#LRC
கேக் செய்து,மீதமிருந்த பிஸ்தா பருப்பு பொடியை பயன்படுத்தி செய்த இந்த டீ, மிக மிக சுவையாகவும், வசனையாகவும் இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
3பேர்
  1. 3டேபிள் ஸ்பூன் பிஸ்தா பருப்பு பொடி
  2. 1/4லிட்(1கப்)பால்
  3. தேவையானஅளவு வெள்ளை சர்க்கரை
  4. 1டேபிள் ஸ்பூன் பால் பவுடர்
  5. 1ஸ்பூன் டீ தூள்
  6. 3டம்ளர் தண்ணீர்
  7. 2ஏலக்காய்
  8. 1/4ஸ்பூன் பெருஞ்சீரகம்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.

    முதலில்,2டேபிள் ஸ்பூன் பிஸ்தா பருப்பு பொடியை நன்றாக இடித்தும்,1டேபிள் ஸ்பூன் (டீ-யுடன் மென்று சாப்பிட)கொரகொரப்பாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    பின் டீ டிகாசன் தயார் செய்ய வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில்,3டம்ளர் தண்ணீரில் ஏலக்காய்,பெருஞ்சீரகம்,டீ தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

  3. 3

    கொதித்ததும், மேலும் 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு,வடிகட்டவும்.

  4. 4

    மற்றொரு பாத்திரத்தில்,பால் ஊற்றி அதில் 3டேபிள் ஸ்பூன் இடித்த பிஸ்தா பொடி,பால் பவுடர் மற்றும் 1-1.5டம்பளர் (விருப்பத்திற்க்கேற்ப) டிகாசன் சேர்த்து கொதிக்க விடவும்.

  5. 5

    உடனே பருகுவதென்றால், சர்க்கரையும் சேர்த்து விடலாம்.மேலும் 2நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க விடவும்.

  6. 6

    கொதிக்க கொதிக்க,வெளிர் பச்சை நிறம் வரும்.அதோடு பால் பவுடர் சேர்த்திருப்பதால் பிஸ்தாவுடன் சேர்த்து வாசனையும் நன்றாக இருக்கும்.

  7. 7

    வடிகட்டியும்,வடிகட்டாமலும் படத்தில் காட்டியுள்ளேன்.
    வடிகட்டமால், பிஸ்தாவை சுவைத்து டீ-யைப் பருக நன்றாக இருக்கும்.

  8. 8

    அவ்வளவுதான்.சுவையான, வெளிர் பச்சை நிறத்தில்,பிஸ்தா டீ ரெடி.

    *பால் பவுடர் சேர்க்காமல் செய்தால்,rich taste,வாசனை சற்று குறைவாக இருக்கும்.

    *பிஸ்தா மென்று சாப்பிட வேண்டாமெனில் நன்கு பொடி செய்து சேர்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Top Search in

Similar Recipes