ரவா லட்டு(rava laddu recipe in tamil)

Smriti
Smriti @JSmriti

ரவா லட்டு(rava laddu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 தேக்கரண்டி நெய்
  2. 1 கப் ரவை
  3. 3/4 கப் தேங்காய் துருவல்
  4. 1 தேக்கரண்டி உலர் திராட்சை
  5. 3/4 கப் பொடித்த சர்க்கரை
  6. 4 ஏலக்காய் தூள்
  7. 1 மேஜைக்கரண்டி விரும்பிய நட்ஸ்
  8. 1/4 கப் பால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வட சட்டியில் நெய் சேர்க்கவும் நெய் உருகியதும் ரவையை சேர்த்து அவையின் நிறம் மாறாமல் வறுத்து கொள்ளவும். அதன்பின் இதில் தேங்காய் துருவல் மற்றும் உலர் திராட்சையை சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.

  2. 2

    பிறகு பொடித்த சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக எல்லா பக்கமும் சர்க்கரை சேரும்படி பிரட்டிக் கொள்ளவும். இதனை மேலும் இரண்டு நிமிடங்கள் வட சட்டியில் வதக்கவும்.

  3. 3

    விரும்பிய நட்ஸ்களை பொடி செய்து இதில் சேர்க்கவும் கடைசியாக சூடான பாலை சேர்த்து ஒரு நிமிடம் கலக்கி விட்டு அடுப்பை அணைக்கவும்.

  4. 4

    இந்தக் கலவையை வெதுவெதுப்பாக ஆகும்வரை ஆறவிடவும். சூடு பொறுக்கும் பதம் இருக்கும் பொழுதே இதை சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Smriti
Smriti @JSmriti
அன்று

Similar Recipes