பீன்ஸ் குருமா(beans kurma recipe in tamil)

Sherifa J
Sherifa J @SherifaJ

பீன்ஸ் குருமா(beans kurma recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 200 கிராம் பீன்ஸ்
  2. 1 சிறிய உருளைக்கிழங்கு
  3. 1 கைப்பிடி சின்ன வெங்காயம்
  4. 2 தக்காளி
  5. 1 சிறிய துண்டு தேங்காய்
  6. 1/2 குழிக்கரண்டி எண்ணெய்
  7. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  8. 1 மேஜை கரண்டி மிளகாய்த்தூள்
  9. 1 மேஜை கரண்டி மல்லித் தூள்
  10. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  11. 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  12. கொஞ்சம்மல்லி மற்றும் புதினா இலைகள்
  13. தேவையானஅளவு உப்பு
  14. 2 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும் எண்ணெய் சூடானதும் அரைத்த வெங்காய விழுதைச் சேர்த்து மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.

  2. 2

    இதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு நறுக்கிய மல்லி புதினா இலைகள் இவற்றைச் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து 2 நிமிடம் வதக்கவும்.

  3. 3

    துண்டுகளாக வெட்டிய பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு சேர்க்கவும் இதில் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வெந்த பின் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வதங்கிய பின் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் தேங்காய் விழுதை சேர்த்து கொஞ்சம் கொத்தமல்லி இலைகளை தூவி குக்கரை மூடி 3 விசில் வேகவிடவும் சுவையான பீன்ஸ் குருமா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sherifa J
Sherifa J @SherifaJ
அன்று

Similar Recipes