நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil)

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen

ரமலான் மாதத்தில் மிகவும் பிரபலமான இந்த நோன்பு கஞ்சி சுவைக்காதவர்கள் மிகவும் குறைவே

நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil)

ரமலான் மாதத்தில் மிகவும் பிரபலமான இந்த நோன்பு கஞ்சி சுவைக்காதவர்கள் மிகவும் குறைவே

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100 கிராம் பச்சரிசி குருணை
  2. 50 கிராம் பாசிப்பருப்பு
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. தேவையானஅளவு உப்பு
  6. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  7. தேவையானஅளவு மல்லி புதினா மற்றும் கறிவேப்பிலை
  8. 1/4 கப் கடலெண்ணெய்
  9. தலா 2 பட்டை கிராம்பு ஏலக்காய்
  10. 2 பச்சை மிளகாய்
  11. 1 மேஜை கரண்டி சோம்புத் தூள்
  12. 1/2 தேங்காய் துருவல்
  13. 4 லிட்டர் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பெரிய குக்கரில் எண்ணெய் சேர்க்கவும் சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும் பிறகு நீளமாக நறுக்கிய வெங்காயம் பாதி அளவு மல்லி புதினா இலைகள் இஞ்சி பூண்டு விழுது இவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  2. 2

    நறுக்கிய தக்காளி கீறிய பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அதன் பின் அரை மணி நேரம் ஊற வைத்த வறுத்த பாசிப்பருப்பு மற்றும் பச்சரிசி கூறினேனே இதில் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும்.

  3. 3

    இதில் தண்ணீர் சேர்த்து தேங்காய்த் துருவல் மற்றும் சோம்பு தூள் தேவையான அளவு உப்பு மீதமுள்ள மல்லி புதினா இலைகள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தபின் சிறு தீயில் 20 நிமிடம் வேக விடவும்.

  4. 4

    ரமதான் மாதத்தில் சுவை அதிகமாக இருக்கக்கூடிய இந்த கஞ்சியுடன் வடை அல்லது பூண்டு ஆகியவை சேர்த்து சாப்பிடும்போது ருசியாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen
அன்று

Similar Recipes