நோன்பு கஞ்சி(Nonbu kanji Recipe in Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

நோன்பு கஞ்சி(Nonbu kanji Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4-5 பரிமாறுவது
  1. 3/4 கப் உடைத்த பச்சரிசி
  2. 1/4 கப் வறுத்த பாசிப்பருப்பு
  3. 1 லிட்டர் தண்ணீர்
  4. 1 ஸ்பூன் எண்ணெய்
  5. 1 பிரிஞ்சி இலை
  6. 1/4டீஸ்பூன் தலா பட்டை கிராம்பு ஏலக்காய் ஸ்டார் பூ தூள்கள்
  7. 1 ஸ்பூன் சீரகம்
  8. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1 ஸ்பூன் தனியா தூள்
  10. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  11. 1/2 பெரிய வெங்காயம்
  12. 4-5 பூண்டு பல்
  13. 1தக்காளி
  14. கைப்பிடி அளவு மல்லித்தழை
  15. கைப்பிடி அளவு புதினா இலை
  16. தேவைக்கு ஏற்பஉப்பு
  17. 1/4 கப் தயிர்
  18. 1பச்சை மிளகாய்
  19. 1டீஸ்பூன் வெந்தயம் 2 மணி நேரம் ஊற வைத்தது
  20. 1/4 கப் தேங்காய்த்துருவல் விருப்பப்பட்டால்
  21. 1 டீ ஸபூன் தனி மிளகாய்த்தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    குக்கரில் எண்ணெய் சேர்த்து பிரிஞ்சி இலை பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்

  2. 2

    தக்காளி சேர்த்து மல்லித்தழை மற்றும் புதினா சேர்த்து மஞ்சள் தூள் பட்டை கிராம்பு ஏலக்காய் ஸ்டார் பூ தனி மிளகாய்த்தூள் தனியாத்தூள் உப்பு தயிர் இஞ்சி பூண்டு விழுது பூண்டுப்பல் தயிர் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    வறுத்து வைத்திருக்கும் பாசிப்பருப்பு வெந்தயம் மற்றும் அரிசியை சேர்த்து அரை லிட்டர் மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2-3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

  4. 4

    குக்கரை திறந்து நன்றாக மசித்து விட்டு மீதமிருக்கும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறிவிடவும். தேவைப்பட்டால் இன்னமும் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

  5. 5

    உஷ்ணத்தை குறைக்கும் சத்தான நோன்பு கஞ்சி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes