ரோட் சைடு காளான்(roadside mushroom recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டைகோஸ், காளான் இவை இரண்டும் சிறிது சிறிதாக கட் செய்து தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் இவற்றை சேர்த்து மைதா மாவு, சோளமாவு, உப்பு, மிளகாய் தூள் 1 ஸ்பூன், காஷ்மீர் மிளகாய்த்தூள் 1 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.
- 3
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது சிறிதாக எடுத்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.பிறகு பொரித்த உருண்டைகள் பெரிதாக இருந்தால் அவற்றை சிறிய துண்டுகளாக பிரித்து வைத்து கொள்ளவும்.
- 4
பிறகு வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், சேர்த்து நன்கு வதக்கவும்.தக்காளி பேஸ்ட் சேர்த்து பின்னர் மிளகாய் தூள் 1 ஸ்பூன், உப்பு, இஞ்சி பூண்டு விழுது 1 1/2 ஸ்பூன் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
இதில் சர்க்கரை சேர்த்து கலந்து விட்டு ஒரு பவுலில் சோளமாவு, தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு இதில் ஊற்றி உப்பு காரம் சரிபார்த்து கொள்ளவும்.
- 6
ஒரு கொதி வந்ததும் பொரித்து எடுத்த துண்டுகளை இதில் சேர்த்து கிளறி விட்டு சிறிது நேரம் அப்படியே வைக்கவும். சூடாக பரிமாறும் போது சிறிதளவு கட் செய்த வெங்காயம், கொத்தமல்லி சிறிதளவு தூவி பரிமாறவும். நன்றி
Similar Recipes
More Recipes




















கமெண்ட்