பாவக்காய் ஊறுகாய் (Bitter gourd pickle recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாவக்காயை கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து, விருப்பப்பட்ட வடிவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். நான் நீளவாக்கில் சிறிய துண்டு களாக நறுக்கியுள்ளேன்.
- 2
பூண்டு தோல் உரித்து வைக்கவும். வெந்தயம்,கடுகு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
- 3
புளியை நன்கு கரைத்து கெட்டியான விழுதாக எடுத்து வைக்கவும்.
- 4
அதில் கொஞ்சம் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி பத்து நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் எடுத்து அதில் வரும் தண்ணீரை பிழிந்து எடுத்து தயாராக தட்டில் வைக்கவும்.
- 5
பின்னர் ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள பாவக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
வேறு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வற்றல் மிளகாய், உரித்து வைத்துள்ள பூண்டை சேர்த்து வதக்கவும்.
- 7
பின்னர் அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு சேர்த்து கலந்து,தயாராக வைத்துள்ள புளி விழுதை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 8
ஐந்து நிமிடங்கள் நன்கு வேக விடவும்.
- 9
பின்பு முதலில் வதக்கி வைத்துள்ள பாவக்காய் துண்டுகளை சேர்த்து கலக்கவும்.
- 10
பின்னர் கடுகு, வெந்தயம் பொடியை சேர்த்து கலந்து விடவும்.
- 11
கடைசியாக கொஞ்சம் வெல்லப்பொடி சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்கு கலந்து விடவும்.
- 12
ஊறுகாயில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கலந்து இறக்கினால் பாவக்காய் ஊறுகாய் தயார்.
- 13
தயாரான ஊறுகாயை எடுத்து ஒரு கண்ணாடி பௌலில் சேர்த்து வைக்கவும்.
- 14
இந்த ஊறுகாய் சூடான சாதம்,தயிர் சாதம்,கலந்த சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ஆவக்காய் ஊறுகாய் (Andra style Aavakkaai pickle)
ஆவக்காய் ஊறுகாய் தாளிப்பு இல்லாமல் செய்வதால் ஒரு நல்ல மணத்துடன் சுவையும் கொண்டுள்ளது. நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் ஆந்திரா ஸ்டைல் உறுகாய் இது.#birthday4 Renukabala -
கார சாரமான சத்தான பூண்டு ஊறுகாய்(garlic pickle recipe in tamil)
பூண்டு, இஞ்சி, மிளகாய், ஸ்பைஸ், தாவர மூலிகைகள் இயற்க்கை நம் உடல் நலனுக்கு தந்த வர பிரசாதங்கள், உணவில் சேர்க்க#birthday4 Lakshmi Sridharan Ph D -
எலுமிச்சை பழ ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
#queen3எலுமிச்சை . பழங்கள் என் தோட்டத்து மரத்தில் இருந்து ஃபிரெஷ் ஆக பறித்தது. ரங்கபூர் லைம் என்று பெயர். அதனால் தான் அதை வளர்க்கிறேன். சுவை, சத்து, விட்டமின் c ஏராளம். ஊறுகாய் ஏஇது தயிர் சாதம், சப்பாத்தி, பரோட்டா, அடை கூட சாப்பிடுவேன். குட்டி சுட்டி மருமாள் இந்த என் ஊறுகாயை ரசித்து சாப்பிடுவாள் Lakshmi Sridharan Ph D -
-
* நார்த்தங்காய் ஊறுகாய் *(citron pickle recipe in tamil)
#birthday1எனது அம்மாவிற்கு, நார்த்தங்காய் ஊறுகாய், மிகவும் பிடிக்கும்.அவர் செய்து பார்த்திருக்கின்றேன்.அவரது கைப்பக்குவம் இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு அவரது கைப்பக்குவத்தில், இதனை செய்துள்ளேன். Jegadhambal N -
-
-
* க்விக் மாங்காய் ஊறுகாய் *(mango pickle recipe in tamil)
#birthday4இது மாங்காய் சீசன்.மேலும் மாங்காயை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை.இதை செய்வது சுலபம். Jegadhambal N -
-
-
-
* கிரீன் கொய்யா ஊறுகாய்*(green goa pickle recipe in tamil)
#queen3கொய்யாவில் வைட்டமின் சி, வைட்டமின் பி, இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளது.இது குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியை தருவதோடு, எலும்புகளுக்கும் வலு தருகின்றது.இந்த ஊறுகாயில் வினிகர் சேர்ப்பதால் எளிதில் கெடாது. Jegadhambal N -
* பூண்டு ஊறுகாய் *(garlic pickle recipe in tamil)
#HF @cook_renubala123,recipe,பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகின்றது.தினமும் பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒர் ஆரோக்கிய வளையமாக திகழ்கின்றது.வறுத்த பூண்டை சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் அழிந்து விடும். Jegadhambal N -
எலுமிச்சை ஊறுகாய் (lemon pickle) (Elumichai oorukaai recipe in tamil)
#homeஎலுமிச்சை எல்லா காலத்திலும் எல்லா கடைகளிலும் கிடைக்கும் ஒரு அதிசயக்கனி.இதில் வைட்டமின் C, பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது. எலுமிச்சை சாறு பித்தத்தை குறைக்கும். தோலில் வரும் கரும்புள்ளிகள், சுருக்கங்களை குறைக்கும். நிறைய சத்துக்கள் நிறைந்த இந்த பழத்தின் ஊறுகாயும் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
சாம்பல் பூசணி தோல் துவையல் (Ash gourd chutney recipe in tamil)
#goஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. எதையும் வீணாக்காதீர்கள். மோர் குழம்பு, கூட்டு சதையில் செய்து, தோலை துவையல் செய்தேன். வாசனைக்கு சிறிது புதினா சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
-
திடீர் மாங்காய் ஊறுகாய் (Thideer mankai oorukaai recipe in tamil)
(Instant mango pickle)#arusuvai 3 Renukabala -
*குடமிளகாய் ஊறுகாய்*(capsicum pickle recipe in tamil)
#queen3இது உடல் எடையைக் குறைக்கும்.வயது முதிர்வை தடுக்கும்.மூட்டு வலிக்கு மருந்தாகும்.நீரிழிவு நோயிலிருந்து விடுபட வழி வகுக்கும். Jegadhambal N -
மாங்காய் பூண்டு ஊறுகாய் (Maankaai poondu oorukaai recipe in tamil)
#goldenapron3#arusuvai2 Mathi Sakthikumar -
கோவில் புளியோதரை 2 (Temple tamarind rice recipe in tamil)
#RDகோவில் புளியோதரை நிறைய விதத்தில் செய்கிறார்கள்.நான் செய்துள்ள இந்த கோவில் புளியோதரை மிகவும் சுவையாக இருந்தது. முதலில் ஒரு விதத்தில் கோவில் புளியோதரை செய்து பதிவிட்டுள்ளேன். இது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செய்யும் முறைப்படி செய்துள்ளேன். Renukabala -
-
More Recipes
கமெண்ட் (8)