சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து பிறகு தண்ணீரை வடித்து குக்கரில் சேர்த்து சிறிதளவு உப்பு,தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து 5 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்
- 2
அடி கனமான கடாயில் கடலை எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு தாளித்து, தோல் சீவி நறுக்கிய இஞ்சி துண்டு பூண்டு பல் சேர்த்து வதங்கியதும், நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளியை சேர்த்து மிதமான தீயில் நன்கு மசிய வதக்கி ஆறவிடவும்
- 3
வேறொரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து 3 டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கிய தக்காளி வெங்காயம் விழுதை ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து நன்கு நைசாக விழுதாக அரைத்து அதனையும் சேர்த்து வதக்கவும்
- 4
இப்போது மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் சேர்த்து அதனையும் மிதமான தீயில் பச்சை வாடை போக இரண்டு நிமிடம் வதக்கவும்
- 5
இப்போது வேகவைத்த கடலையை அந்த தண்ணீரோடு மசாலா பொடி சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். இதனை தட்டு கொண்டு மூடி குறைந்த தணலில் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்
- 6
இறுதியாக சிறிது கசூரி மேத்தி யை நன்கு நசுக்கிவிட்டு கிரேவியில் தூவி விட்டு அடுப்பை அணைக்கவும்
Similar Recipes
More Recipes






















கமெண்ட்