ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1கப் ராகி மாவு
  2. 1/2கப் கோதுமை மாவு
  3. 3/4கப் நாட்டு சர்க்கரை
  4. தேவையானஅளவு உப்பு
  5. 100கிராம் வெண்ணெய்
  6. 1/2ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. ஒரு சிட்டிகை உப்பு
  8. 3டேபிள்ஸ்பூன் பால்
  9. தேவையானஅளவு சாக்கோ சிப்ஸ்
  10. 1/2ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ராகி மாவை வாணலியில் போட்டு லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு இதை பவுலில் மாற்றி கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து விடவும்.

  2. 2

    இதில் வெண்ணிலா எசன்ஸ், வெண்ணெய் அறையின் வெப்பநிலையில் எடுத்து சேர்த்து கொள்ளவும். அதை நன்கு கைகளால் கிளறி விட்டு நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.

  3. 3

    சாக்கோ சிப்ஸ் தேவையான அளவு சேர்த்து ஒன்றாக சேர்த்து கலந்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    சிறிதளவு மாவை கையில் எடுத்து உருண்டையாக உருட்டி லேசாக தட்டி கொள்ளவும். பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பர் போட்டு இடைவெளி விட்டு குக்கீஸ் களை வைத்து கொள்ளவும்.

  5. 5

    மைக்ரோவேவ் ஓவனை கன்வக்ஷன் மோடில் 170 டிகிரி செல்சியஸ் 2 நிமிடம் ப்ரீஹூட் செய்து இந்த ட்ரேயை ஓவனில் வைத்து 17 லிருந்து 20 நிமிடம் வரை பேக் செய்து எடுக்கவும்.

  6. 6

    பிறகு வெளியே எடுத்து கூலிங் ரேக்கில் வைக்கவும். சூடு தணிந்த பின்னர் எடுத்து பரிமாறவும்.

  7. 7

    சத்தான சுவையான ராகி குக்கீஸ் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes