கரம் மசாலா நூடுல்ஸ்(garam masala noodles recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#qk
நம் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு செய்து கொடுக்க எதுவும் நம் வீட்டில் பொருட்கள் இல்லை என்றால் உடனே இதுபோன்று பத்து நிமிடம் ஒதுக்கி செய்து கொடுத்தால் வந்த விருந்தினர் மகிழ்ச்சி அடைவார்.

கரம் மசாலா நூடுல்ஸ்(garam masala noodles recipe in tamil)

#qk
நம் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு செய்து கொடுக்க எதுவும் நம் வீட்டில் பொருட்கள் இல்லை என்றால் உடனே இதுபோன்று பத்து நிமிடம் ஒதுக்கி செய்து கொடுத்தால் வந்த விருந்தினர் மகிழ்ச்சி அடைவார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 நபர்
  1. 2 பாக்கெட் மேகி நூடுல்ஸ்
  2. 1 வெங்காயம்
  3. ½ தக்காளி
  4. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  5. 2 பச்சை மிளகாய்
  6. 1 கொத்து கருவேப்பிலை
  7. 2 பாக்கெட் மேகி மசாலா தூள்
  8. ½ தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  9. ½ தேக்கரண்டி கறி மசாலா தூள்
  10. உப்பு
  11. 2 மேஜைக்கரண்டி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 2 தம்ளர் தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விடவும்.பின்பு அதில் நூடுல்ஸ் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

  2. 2

    அதே நேரத்தில் ஒரு கடையில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம்,கருவேப்பிலை,பச்சை மிளகாய்,உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு அதில் தக்காளியும் சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும்.

  3. 3

    பின்பு அதில் மசாலா பொருட்கள், மேகி மசாலாவும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கவும்.

  4. 4

    பின்பு அதில் வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்து ஒரு பெரட்டு பெரட்டி 2 நிமிடம் அடுப்பை குறைத்து,சூடாக சாப்பிடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
அன்று

Similar Recipes