எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20-25 நிமிடங்கள
2-3 நபர்கள்
  1. 1 பெரிய வெங்காயம்
  2. 1கப் கோதுமை ரவை
  3. ஒரு சிறிய துண்டு இஞ்சி
  4. 3 பச்சை மிளகாய்
  5. 1/4 டீஸ்பூன் கடுகு
  6. 3 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய்
  7. 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  8. 1/2 டீஸ்பூன் உளுந்து பருப்பு
  9. மல்லி இலை
  10. கறிவேப்பிலை
  11. 2 டேபிள் ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

20-25 நிமிடங்கள
  1. 1

    கோதுமை ரவை உப்புமா செய்ய மேலே கொடுத்துள்ள தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து தயாராக வைத்துக்கொள்ளவும்

  2. 2

    வெங்காயம், மிளகாய்,இஞ்சி,மல்லி இலை எல்லாம் நறுக்கி வைத்துகொள்ளவும். குக்கரை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய்,வற்றல் மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    நன்கு வதங்கியதும் மூன்று கப் தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.உடனே ரவையை சேர்த்து,மல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

  4. 4

    பின்னர் குக்கரை மூடி ஒரு விசில் வந்த உடனே குக்கரை ஸ்டவ்வில் இருந்து இறக்கி விடவும். ஆவி போனதும் குக்கரை திறந்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து எடுத்தால் எளிமையான, சுலபான உப்புமா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Zyba Fathima
Zyba Fathima @zybafathima
அன்று

Similar Recipes