கருப்பு கொண்டை கடலை சுண்டல்(sundal recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு பேர்
  1. 250 கிராம் கருப்பு கொண்டைக்கடலை
  2. 4 வற்றல் மிளகாய்
  3. ஒரு டீஸ்பூன் கடுகு
  4. ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  5. ஒரு டீஸ்பூன் கல் உப்பு
  6. கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  7. ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  8. 4 மிளகாய் வற்றல்
  9. கால் கப் தேங்காய் துருவல்
  10. சிறிதுகருவேப்பிலை தழை

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். கறுப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அதை வடிகட்டி சிறிய குக்கரில் போட்டு 5 அல்லது 6 விசில் விட்டு வேக வைத்து எடுத்து வைக்கவும். அதை வடிகட்டி சிறிது நேரம் வைக்கவும்.

  3. 3

    இப்பொழுது ஒரு சிறிய கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்தவுடன் உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல்,பெருங்காயம் தூள் இவற்றைப் போட்டு லேசாக வறுத்து அதன்மேல் வேகவைத்த வடிகட்டிய கொண்டைக்கடலையை போட்டு உப்பும் தூவி கிளறிவிடவும்.

  4. 4

    இப்பொழுது அது லேசாக பச்சை வாசனை போனவுடன் தேங்காய்த் துருவல் போட்டு இறக்கிவிடவும்.

  5. 5

    இப்பொழுது சத்தான கொண்டைக்கடலை சுண்டல் தயார். இது சர்க்கரை வியாதி நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meenakshi Ramesh
அன்று

Similar Recipes