கேரட் பீன்ஸ் முட்டைக்கோஸ் பொரியல்(carrot beans cabbage poriyal recipe in tamil)

ARSHA
ARSHA @ARSAT
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 2 பெரிய கேரட்
  2. 15 பீன்ஸ்
  3. 1 சிறிய சைஸ் முட்டைகோஸ்
  4. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 3/4 டீஸ்பூன் மிளகாய் தூள்
  6. தேவையான அளவுஉப்பு
  7. 1/4 டீஸ்பூன் சீரகத்தூள்
  8. 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  9. 1 டீஸ்பூன் கடுகு
  10. 1 கொத்து கருவேப்பிலை
  11. 1 மீடியம் சைஸ் பெரிய வெங்காயம்
  12. 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு வெங்காயம் கருவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்

  2. 2

    பின் நறுக்கி வைத்துள்ள கேரட் பீன்ஸ் முட்டைகோஸ் இவை அனைத்தையும் தேங்காய் எண்ணெயிலேயே நன்கு வதக்கிக் கொள்ளவும்

  3. 3

    கேரட் பீன்ஸ் முட்டைகோஸ் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சீரகத்தூள், உப்பு இவை அனைத்தையும் சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும்

  4. 4

    கேரட் பீன்ஸ் முட்டைகோஸ் நன்கு வதங்கியதும் கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து விடவும் இப்போது பொறியியல் பரிமாறத் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ARSHA
ARSHA @ARSAT
அன்று

Similar Recipes